+

பெற்றோர்களின் பணத்தை சுருட்டும் 'கல்வி உதவித்தொகை மோசடி' - தப்பிப்பது எப்படி?

இன்றைய டிஜிட்டல் உலகில் நிதி மோசடி பல்வேறு வகையில் அரங்கேறி வருகிறது. தினந்தோறும் ‘புது புது’ ரூட்டில் மோசடியாளர்கள் தங்களது வலையை விரிக்கிறார்கள். அதன் ஊடாக அவர்கள் ஆதாயமும் பெறுகிறார்கள். இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.   இந்த நிலையில் கல்வி உதவித்தொ

இன்றைய டிஜிட்டல் உலகில் நிதி மோசடி பல்வேறு வகையில் அரங்கேறி வருகிறது. தினந்தோறும் ‘புது புது’ ரூட்டில் மோசடியாளர்கள் தங்களது வலையை விரிக்கிறார்கள். அதன் ஊடாக அவர்கள் ஆதாயமும் பெறுகிறார்கள். இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.  

இந்த நிலையில் 'கல்வி உதவித்தொகை' (Education Scholarship) எனச் சொல்லி பள்ளி மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். அது எப்படி நடக்கிறது? என்பதை விரிவாக பார்ப்போம். இந்த வகை மோசடியால் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை பாதிக்கப்பட்டவர்கள் நிதி இழப்புக்கு ஆளாகி உள்ளதாக தகவல். இந்த மோசடி தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. 

கல்வி உதவித்தொகை மோசடி நடப்பது எப்படி?

பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோருக்கு வரும் தொலைபேசி அழைப்பு தான் இந்த வகை மோசடியின் தொடக்கப்புள்ளி. மறுமுனையில் பேசும் மோசடி ஆசாமி தன்னை அரசு அதிகாரி போல அறிமுகம் செய்து கொண்டு சம்பந்தப்பட்ட மாணவரின் பெயர், பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, படிக்கின்ற பள்ளி உள்ளிட்ட விவரங்களை சொல்வார். மோசடியாளர் கொடுக்கின்ற தகவல் அனைத்தும் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும். தொடர்ந்து அந்த மாணவருக்கு கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளதாக தெரிவிப்பார். அந்த தொகை எவ்வளவு என்பதையும் குறிப்பிடுவார். 

Scam

இதன் பின்னர் தான் மோசடியாளர் தன் வேலையை காட்டுவார்.

கல்வி உதவித்தொகையை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டி யுபிஐ ஐடி உடன் லிங்க் செய்யப்பட்டுள்ள பெற்றோரின் மொபைல் எண் அல்லது வங்கிக் கணக்கு எண் குறித்த விவரத்தை கேட்பார். இதில் பணத்தை செலுத்துவது போல செலுத்தி டெபாசிட் செய்த பணத்துடன் சேர்த்து சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையும் மோசடியாளர்கள் எடுத்து விடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த வகை மோசடியால் பணத்தை இழந்தவர்கள் இதை தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது. பணத்தை Withdraw செய்வதற்கான ஸ்கேன் கோடினை பெற்றோர்களுக்கு அனுப்பி இந்த மோசடியை மோசடியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு திருநெல்வேலியில் பள்ளி மாணவரின் தாயை தொடர்பு கொண்ட மோசடியாளர்கள் மேற்சொன்ன விவரங்களை சொல்லி மோசடி செய்துள்ளனர். அந்த பெண்மணியின் வங்கிக் கணக்குக்கு ரூ.25,000 வந்துள்ளது. இருப்பினும், அடுத்த சில மணிகளில் அவரது கணக்கில் ஏற்கெனவே இருந்த ஆறாயிரம் ரூபாயும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படி கடந்த ஆண்டில் திருநெல்வேலியில் இந்த மோசடி நடந்துள்ளது.

காவல்துறையினரும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாணவர்களின் தரவுகள் எப்படி கசிந்தது என்பது கேள்வியாக எழுந்துள்ளது. இந்த வகை மோசடி அப்படியே ரேண்டமாக மாநிலம் முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறுகிறது. 

Scam

இந்த மோசடியில் இருந்து தப்புவது எப்படி?

  • பொதுவாக தொலைபேசி அழைப்பில் அரசு அதிகாரிகள் கல்வி உதவித்தொகை குறித்து தொடர்பு கொண்டு பேச மாட்டார்கள். 

  • 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தான் இந்த வகை மோசடியாளர்களின் பிரைம் டார்கெட். 

  • கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக சொல்லி வங்கி கணக்கு விவரம், யுபிஐ ஐடி, ஓடிபி போன்ற விவரங்கள் கேட்டால் அதை பகிராமல் இருப்பது நல்லது. 

  • மாணவர்கள் பள்ளியில் கொடுக்கும் ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கொண்டு வங்கியில் நேரடியாக கல்வி உதவித்தொகை செலுத்தப்படுகிறது. 

  • போன் பே, ஜி பே என யுபிஐ மூலமாக கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு செலுத்தப்படாது. 

  • கல்வி உதவித்தொகை குறித்து வரும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றிலும் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். 

  • உதவித்தொகை குறித்த அழைப்புகள் வந்தால் பள்ளியை தொடர்பு கொண்டு மாணவர்களின் பெற்றோர்கள் அதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 

பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?

கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக சொல்லி வங்கிக் கணக்கு எண், ஓடிபி கேட்கும் தொலைபேசி அழைப்புகளை மாணவர்களின் பெற்றோர்கள் நம்ப வேண்டாம். எஸ்.சி./எஸ்.டி., பிசி, எம்பிசி ஆகிய நலத்துறைகள் மற்றும் சமூக நலத்துறை மூலம் நேரடியாகவே வங்கிக் கணக்கிற்கு கல்வி உதவித்தொகையானது அனுப்பப்படுகிறது. அதனால் போன் பே அல்லது ஜி பேயில் உதவித்தொகை அனுப்புவோம், என வரும் தொலைபேசி அழைப்புகள் மோசடி அழைப்புகளாக இருக்கலாம். பள்ளியில் மாணவர்களின் தகவல்களை பெற்றுத்தான் உதவித்தொகை வழங்கப்படுகிறது என கல்வித்துறை தெரிவித்துள்ளது. 


Edited by Induja Raghunathan

facebook twitter