+

கூகுளின் ஏஐ மேம்பாட்டில் அடுத்த கட்டமாக அமையும் 'Gemini 3'

கூகுள் ஜெமினி-3, தேடல், ஜெமினி செயலி, வர்த்தக கருவிகளில் வலுவான காரண விளக்கம், பல்நோக்கி ஆற்றல், ஜெனரேட்டிங் யூஐ ஆகிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

நீங்கள் காபியை சுவைத்துக்கொண்டிருக்கும் போது, கைக்குட்டையில் வரைந்த சித்திரத்தை செயலியாக மாற்றுமாறு உங்கள் போனுக்கு கட்டளையிடுவதையும், ஒரு நிமிடத்திற்குள் அதற்கான முன்னோட்ட வடிவத்தையும் பெறுவதையும் கற்பனை செய்து பாருங்கள்.

மொழி மாதிரிகளில் (LLM) பெரும் மாற்றம் என கூகுள் கூறும் ஜெமினி 3 வடிவத்தை அறிமுகம் செய்யும் நிலையில், இத்தகைய காட்சியை தினசரி சாத்தியமாக்க இருப்பதாக தெரிவிக்கிறது. ஜெமினி 3, மேலும் திறன் வாய்ந்த தேடலை இயக்கி, புதிய தொடர்பு கொள்ளும் இடைமுகம் மற்றும் புதிய அலையிலான டெவலப்பர் கருவிகளை இயக்கும் என்றும் நிறுவனம் தெரிவிக்கிறது.

“பல்நோக்கிலான புரிதலில் உலகின் சிறந்த மாதிரி இது மற்றும் இதுவரையான அதி திறன் வாய்ந்த ஏஜெண்டிக் வைப் கோடிங் மாதிரி. ஜெமினி 3, எந்த எண்ணத்திற்கும் செயல்வடிவம் கொடுக்க கூடியது, குறைவான பிராம்ட் தேவைப்படும் வகையில் நோக்கம், பொருத்தத்தை வேகமாக புரிந்து கொள்ளக்கூடியது,” என்று கூகுள் மற்றும் ஆல்பபெட் சி.இ.ஓ.சுந்தர் பிச்சை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  
Gemini 3

காரண விளக்கம், பல்நோக்கிலான புரிதல், ஏஜெண்டிக் கோடிங் மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ என கூகுள் குறிப்பிடும் அம்சம் ஆகியவற்றில் மேம்பாடுகளை ஒன்றாக கொண்டு வருவதாக இந்த அறிவிப்பு அமைகிறது. இவை அனைத்தும் நுகர்வோர், டெவலப்பர்கள், வர்த்தக வாடிக்கையாளர்களுக்காக ஒன்றாக அளிக்கப்படுகிறது.

நீண்ட கால நோக்கிலான முன்னெடுப்பின் தொடர்ச்சி இது, என சுந்தர் பிச்சை தெரிவித்தார். ஜெமினி இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது என்று குறிப்பிட்டவர், ஒரு நிறுவனமாக நாங்கள் செய்திருக்கும், மிகப்பெரிய அறிவியல், பிராடெக்ட் முயற்சி என்றும் வர்ணித்தார்.

முன்னேற்றத்தின் அடுத்த கட்டம் என ஜெமினி 3- ஐ குறிப்பிட்டார். ஜெமினி 1, பல்நோக்கு தன்மை மற்றும் பொருத்தத்தின் அளவை நீட்டித்த நிலையில், ஜெமினி 2 ஏஜெண்டிக் செயல்பாடு மற்றும் காரண விளக்கத்திற்கான அடித்தளம் அமைத்தது. இவை ஜெமினி 2.5-இல் ஒன்றிணைந்தன.

வலுவான பரந்த மாதிரி

கூகுளின் மிகவும் திறன் வாய்ந்த மாதிரியாக இது முன் வைக்கப்படுகிறது. ஜெமினி செயலி மற்றும் ஏஐ தேடலில் கட்டணச் சேவையாளர்கள் அணுகலாம். வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு வெர்ட்க்ஸ் ஏஐ மற்றும் ஜெமினி எண்டர்பிரைஸ் மூலம் அளிக்கப்படுகிறது.

டெவலபர்கள், ஜெமினி ஏபிஐ மற்றும் ஏஐ ஸ்டூடியோ வாயிலாக அணுகலாம். மேலும், ஏஜெண்ட் சார்ந்த திறனை உணர்த்த ஆண்டிகிராவிட்டி எனும் மேடையையும் அறிமுகம் செய்துள்ளது.

ஜெனரேட்டிவ் யூஐ பின் உள்ள எண்ணங்கள் குறித்து கூகுள் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த மாதிரிகள் வரி வடிவை மற்றும் அல்லாமல், நிகழ் நேர தொடர்பு கொள்ளும் தன்மையை அளிக்க வல்லவை என்பதை உணர்த்தியுள்ளனர்.

காரண விளக்க மாதிரிகளில் ஜெமினி 3 வேகமானது என கூகுள் கருதுகிறது. படங்கள் மற்றும் வீடியோக்களை கையாள்வதில் வலுவானது. அதிக சிக்கலான கட்டளைகளை கோடிங் மற்றும் இடைமுகமாக மாற்றுவதில் மேம்பட்டது.

பல்வேறு அளவுகோள்களில் ஜெமினி 3 புரோ முன்னிலை வகிப்பதையும், நிஜ உலக பயன்பாடுகளில் சிறந்து விளங்குவதையும் கூகுள் ஆவணங்கள் உணர்த்துகின்றன. பல்நோக்கு சோதனைகள், நீண்ட பொருத்த செயல்கள், கோடிங் அளவுகோள் ஆகியவற்றில் இந்த மாதிரி அதிக மதிப்பெண் பெறுகிறது.

தேடலில் காட்சி நோக்கிலான லேஅவுட், மீண்டும் வடிவமைக்கப்பட்டுள்ள ஜெமினி செயலி ஆகிய அம்சங்களையும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இவை, மை ஸ்டப் பகுதியில் பயனாளிகள் ஆக்கங்களை சேமிப்பதோடு, காட்சி லேஅவுட் மற்றும் டைனமிக் வியூ ஆகிய சோதனைகளையும் அளிக்கிறது.

தேடல், ஜெனரேட்டிவ் யூஐ மேம்பாடுகள்

மென்பொருள் உருவாக்கப்படும் விதத்திற்கு சவால் விடும் வகையில் இந்த மேம்பாடு அமைந்துள்ளது. கூகுள் ஸ்டூடியோ மற்றும் ஜெமினி ஏபிஐ பிராடக்ட் தலைவர், லோகன் கிலாபட்ரிக், அனுபவம் வாய்ந்த மென்பொருள் வல்லுனர்கள் மற்றும் புதுமுக வைப் கோடிங் செய்பவர்கள் என இருத்தரப்பினருக்கும் ஜெமினி 3 உதவியாக இருக்கும், என குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் அனுபவசாலி அல்லது வைப் கோடராக இருந்தாலும், ஜெமினி 3 எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும்,” என்றும் அவர் கூறியுள்ளார். டூல்கள், மற்றும் ஐடி.இக்களில் இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது முன்னோட்ட உருவாக்கம் மற்றும் தானியங்கிமயத்தை வேகமாக்கும், என்றும் கூறியுள்ளார்.

ஜெமினி 3 கொண்டு வரும் ஏஜெண்டிக் கோடிங் திறன் மற்றும் ஒரு மில்லியன் டோக்கன் பொருத்த செயல்பாடு, மொத்த கோடிங் பரப்பையும் அலசி பல அடுக்கு செயல்களை செய்து முடிக்க வழி செய்கிறது என அவர் விளக்கியுள்ளார்.

தேடல் மற்றும் ஆய்வு குழுக்கள் வேறு ஒரு பலனை வலியுறுத்துகின்றன. இஞ்சினியரிங் பார் சர்ச் பிரிவு துணைத்தலைவர் எலிசபெத் ஹேமன் ரீட், ஜெமினி 3 -இன் காரண விளக்க ஆற்றல், தொடர்பு கொள்ளும் மற்றும் செயல்படுத்தக்கூடிய தேடல் முடிவுகளை அளிக்கிறது என்கிறார்.

“ஜெமினி3 அதி நவீன காரண விளக்க ஆற்றல் ஆழம் மற்றும் நுணுக்கங்களை புரிந்து கொண்டு, துடிப்பான காட்சி நோக்கிலான லேஅவுட், தேடல் கோரிக்கைகளுக்கு ஏற்ற சிமிலேஷன் கொண்டு புதிய ஜெனரேட்டிவ் யூஐ தன்மையை வழங்குகிறது,” என்கிறார்.

முதல் முறையாக துவக்கத்திலேயே தேடலில் ஜெமினி மாதிரி இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

வரி வடிவ பதிலை விட செயல்முறை பதில் அதிக பலனை அளிக்கிறது. சிக்கலான கோரிக்கைகளுக்கு பயனாளிகள் பொருத்தமான சிமுலேஷன் மற்றும் கருவிகள் மூலம், குறிப்பிட்ட பொருளை மேலும் ஆய்வு செய்யலாம்.

இந்த சேவையின் இலட்சியங்களை ஒருங்கிணைக்கும் ஆய்வு சரடாக ஜெனரேட்டிவ் யூஐ இருக்கிறது. ஜெனரேட்டிவ் யூஐ செயலாக்கம், இந்த மாதிரி உள்ளடக்கத்தை உருவாக்குவதோடு அல்லாமல், குறிப்பிட்ட பிராம்டிற்கான மாற்றிக்கொள்ளக்கூடிய இடைமுகத்தை அளிக்கிறது, என கூகுள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அம்சம், பக்கங்கள், கேம்கள், கேல்குலேட்டர்கள், சிமுலேஷன்களை எளிதாக உருவாக்கக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மனித முன்னுரிமை தேர்வுகளில் இவற்றின் இடைமுக உருவாக்கம், வல்லுனர் பக்கங்களுக்கு அருகாமையில் அமைந்திருந்தன.

இந்த அம்சத்தின் அடித்தளமாக அமையும் ஆய்வு மற்றும் திட்ட பக்கம், ஜெமினி செயலி, தேடலில் எதிர்வர உள்ள சோதனைகளுக்கு அடிப்படையாக அமைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நடைமுறை பலனை வலியுறுத்தும் விற்பனை வாக்குறுதியை முயற்சித்துப்பார்க்க வர்த்தக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெர்டக்ஸ் ஏஐ மற்றும் ஜெமினி எண்டர்பிரைசில் ஜெமினி 3 சேவையை அணுகலாம் என்றும், காட்சி, வீடியோ அலசல், ஒப்பந்த சீராய்வு உள்ளிட்டவற்றுக்கு ஏற்றவை என்று கிளவுட் ஏஐ துணைத்தலைவர், பொது மேலாளர் சவுரப் திவாரி கூறுகிறார்.

பாதுகாப்பு அம்சங்கள்

இதுவரையான மாதிரிகளில் ஜெமினி3 மிகவும் பாதுகாப்பானது என்றும், விரிவான பாதுகாப்பான மதிப்பீடுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. பிராம்ட் இடையூறுக்கான எதிர்ப்பு மற்றும் பயனர் கூற்றை ஆமோதிப்பது குறைப்பு ஆகிய அமசங்கள் மேம்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முதல் கட்டமாக கட்டண உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெவலப்பர்களுக்கான ஏபிஐ முன்வடிவத்தையும் வழங்குகிறது.

முன்னதாக இந்த மாத துவக்கத்தில், ஓபன் ஏஐ நிறுவனம் ஜிபிடி 5.1 வடிவில் தனது மாதிரிகளுக்கான மேம்பாட்டை அறிமுகம் செய்தது. ஜிபிடி 5.1 மற்றும் ஜிபிடி திங்கிங் இதில் அடங்கும். ஆந்த்ரோபிக் செப்டம்பர் மாதம் சானட் 4.5 அறிமுகம் செய்தது.

ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan

More News :
facebook twitter