+

தூத்துக்குடியில் Vinfast 500 மில்லியன் டாலர் முதலீடு – தமிழ்நாட்டின் EV வளர்ச்சிக்கு பெரிய முன்னேற்றம்!

தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு உறுதியாக செயல்பட்டு வரும் அரசின் தொடர்ந்த முயற்சிக்கு மேலும் ஒரு வலுவான சான்றாக, இன்று Guidance Tamil Nadu நிறுவனம், உலகப் புகழ்பெற்ற மின்சார வாகன நிறுவனம் வின்‌பாஸ்ட் (VinFast) உடன் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கையெழுத்திட்டது. இந்த ஒப்ப

தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு உறுதியாக செயல்பட்டு வரும் அரசின் தொடர்ந்த முயற்சிக்கு மேலும் ஒரு வலுவான சான்றாக, இன்று Guidance Tamil Nadu நிறுவனம், உலகப் புகழ்பெற்ற மின்சார வாகன நிறுவனம் 'வின்‌ஃபாஸ்ட்' (VinFast) உடன் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், வின்‌ஃபாஸ்ட் தன்னுடைய மொத்த USD 2 பில்லியன் முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, தூத்துக்குடியில் USD 500 மில்லியன் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு, வியட்நாமின் இந்த முன்னணி EV நிறுவனத்தின் உலகளாவிய தளத்தில் மையப்பகுதியாக மாறுகிறது.

" align="center">vinfast

தூத்துக்குடி வின்பாஸ்ட் தொழிற்சாலை

முக்கிய அம்சங்கள்:

இந்த புதிய முதலீட்டின் மூலம் மின்பஸ்கள் (e-buses) மற்றும் மின்சார இரு சக்கர வாகனங்கள் (e-scooters) தயாரிக்க உலகத் தரமுடைய உற்பத்தி, அசம்ப்ளி, டெஸ்டிங் வசதிகள் உருவாக்கப்படுகின்றன.

வின்‌பாஸ்டின் முதல் கட்ட தொழிற்சாலை ஏற்கனவே 160 ஹெக்டேரில் செயல்பட்டு, வருடத்திற்கு 50,000 மின்சார வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்டது. இது தற்போது 150,000 வாகனங்கள் தயாரிக்கும் வகையில் விரிவாக்கப்படுகிறது.

இப்போது, மின்பஸ்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் புதிய அத்தியாயமும் தொடங்கப்படுகிறது.

vinfast

தமிழ்நாட்டிற்கான பெரிய பலன்கள்:

தமிழ்நாடு அரசு, வின்‌ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், வேகமான அனுமதிகள், திறனான மனிதவளத்தை மிக விரைவாக வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இந்த விரிவாக்கம் ஒரு முதலீடு மட்டுமல்ல —

  • தமிழ்நாட்டின் தொழில்துறை சூழலுக்கான பெரிய நம்பிக்கை,

  • ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் (#JobsForTN),

  • மேலும் அதிக உள்நாட்டுமயமாக்கல் (localisation) என பல நன்மைகளைத் தருகிறது.

  • தமிழ்நாட்டின் EV பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
More News :
facebook twitter