+

Gold Rate Chennai: ரூ.320 குறைந்த தங்கம் விலை ரூ.96,000-க்கு மேலாகவே நீடிப்பு!

தங்கம் விலை இன்று ரூ.320 குறைந்தாலும் கூட, கிராம் விலை ரூ.12,000-க்கும் மேலாகவும், சவரன் விலை ரூ.96,000-க்கு மேலாகவுமே நீடிக்கிறது. வெள்ளி விலையும் இன்று சற்றே குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்தது, நகை வாங்க விழைவோருக்கு ஆறுதல் தரும் தகவலாக உள்ளது.

சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.12,060 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.96,480 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 உயர்ந்து குறைந்து ரூ.13,157 ஆகவும், சவரன் விலை ரூ.176 உயர்ந்து ரூ.1,05,256 ஆகவும் விற்பனை ஆனது.

தங்கம் விலை இன்று ரூ.320 குறைந்தாலும் கூட, கிராம் விலை ரூ.12,000-க்கும் மேலாகவும், சவரன் விலை ரூ.96,000-க்கு மேலாகவுமே நீடிக்கிறது. வெள்ளி விலையும் இன்று சற்றே குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (4.12.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.12,020 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.96,160 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து ரூ.13,113 ஆகவும், சவரன் விலை ரூ.352 குறைந்து ரூ.1,04,904 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (4.12.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.200 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 குறைந்து ரூ.2,00,000 ஆகவும் உள்ளது.

gold rate today

தங்கம் விலை குறைவு தொடருமா?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.24 ஆக உள்ளது.

தற்போது ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டி இருப்பதால், அடுத்தடுத்த நாட்களில் ஆபரணத் தங்கம் விலை குறைவது சந்தேகமே. எனினும், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு குறையும் பட்சத்தில், விலை குறைவு சாத்தியம்தான் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,020 (ரூ.40 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.96,160 (ரூ.320 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,113 (ரூ.44 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,04,904 (ரூ.352 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,020 (ரூ.40 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.96,160 (ரூ.320 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,113 (ரூ.44 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,04,904 (ரூ.352 குறைவு)


Edited by Induja Raghunathan

More News :
facebook twitter