மிகக் குறுகிய காலத்தில் ரூ.2,700 அளவுக்கு வீழ்ச்சி கண்ட ஆபரணத் தங்கம் விலை இன்று மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்வு போக்கு மீண்டும் தொடரும், என அஞ்சப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாட்களாக அதிரடியாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் கடுமையாக உயரத் தொடங்கியுள்ளது, நகை வாங்க விழைவோரை கலக்கமடையச் செய்துள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 குறைந்து ரூ.8,225 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 குறைந்து ரூ.65,800 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 குறைந்து ரூ.8,973 ஆகவும், சவரன் விலை ரூ.520 குறைந்து ரூ.71,784 ஆகவும் இருந்தது. தற்போது மீண்டும் விலை உயர ஆரம்பித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (9.4.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.65 உயர்ந்து ரூ.8,290 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.520 உயர்ந்து ரூ.66,320 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.71 உயர்ந்து ரூ.8,973 ஆகவும், சவரன் விலை ரூ.568 உயர்ந்து ரூ.72,353 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (9.4.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.102 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 குறைந்து ரூ.1,02,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி நிலவுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தொடங்கி வைத்த வரிவிதிப்பு யுத்தம் என்பது சீனா உடனான வர்த்தக மோதலால் மீண்டும் வலுத்துள்ளது.
இதன் எதிரொலியாக, பங்குச் சந்தைகளில் மீண்டும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. எனவே, பாதுகாப்பான முதலீடு என்ற வகையில் தங்கத்தை நோக்கியே முதலீட்டாளர்கள் பார்வை மீண்டும் திரும்பியுள்ளது. இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து, ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,290 (ரூ.65 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66,320 (ரூ.520 உயர்வும்)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,973 (ரூ.71 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.72,352 (ரூ.568 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,290 (ரூ.65 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66,320 (ரூ.520 உயர்வும்)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,973 (ரூ.71 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.72,352 (ரூ.568 உயர்வு)
Edited by Induja Raghunathan