+

Gold Rate Chennai: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை ரூ.92,000-க்கு விற்பனை!

அதிரடியாக நேற்று ஏற்றம் கண்ட ஆபரணத் தங்கம் விலை இன்று அதே வேகத்தில் சற்று சரிந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு கொஞ்சம் ஆறுதலுக்குரிய தகவலாக உள்ளது. சென்னையில் புதன்கிழமை ஒரே நாளில் ரூ.1,600 அளவில் தங்கம் விலை உயர்ந்தது. சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.11,600 ஆகவும்

அதிரடியாக நேற்று ஏற்றம் கண்ட ஆபரணத் தங்கம் விலை இன்று அதே வேகத்தில் சற்று சரிந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு கொஞ்சம் ஆறுதலுக்குரிய தகவலாக உள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை ஒரே நாளில் ரூ.1,600 அளவில் தங்கம் விலை உயர்ந்தது. சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.11,600 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.92,800 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.12,655 ஆகவும், சவரன் விலை ரூ.1,01,240 ஆகவும் நேற்று விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் சவரன் விலை இன்று காலை ரூ.800 அளவில் சரிந்து, ரூ.92,000 ஆக உள்ளது. இந்த விலை குறைவுப் போக்கு தொடரும் என்று எதிர்பார்பார்க்கப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று வெகுவாக குறைந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வியாழக் கிழமை (20.11.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 குறைந்து ரூ.11,500 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 குறைந்து ரூ.92,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 குறைந்து ரூ.12,546 ஆகவும், சவரன் விலை ரூ.872 குறைந்து ரூ.1,00,368 ஆகவும் விற்பனை ஆகிறது.

gold rate

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (20.11.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ரூ.173 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,000 குறைந்து ரூ.1,73,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.67 ஆக உள்ளது. இத்துடன், சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு இன்று ஓரளவு குறைந்ததால் ஆபரணத் தங்கம் விலையும் சற்று குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,500 (ரூ.100 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.92,000 (ரூ.800 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,546 (ரூ.109 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,00,368 (ரூ.872 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,500 (ரூ.100 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.92,000 (ரூ.800 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,546 (ரூ.109 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,00,368 (ரூ.872 குறைவு)

More News :
facebook twitter