
வாரத்தின் முதல் நாளான நேற்று மாற்றம் ஏதுமின்றி அமைதி காத்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்தது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.12,040 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.96,320 ஆகவும் மாற்றமின்றி இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.13,135 ஆகவும், சவரன் விலை ரூ.1,05,080 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆனது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்றே மீண்டுள்ளது, தங்கம் விலையில் எதிரொலித்துள்ளது. எனினும், தற்போது கிராம் விலை ரூ.12,000 ஆகவும், சவரன் விலை 96,000 ஆகவும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் -செவ்வாய்க்கிழமை (9.12.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.12,000 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.96,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து ரூ.13,091 ஆகவும், சவரன் விலை ரூ.353 குறைந்து ரூ.1,04,728 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (9.12.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.199 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,99,000 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை குறைவு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.93 ஆக சற்றே மீண்டுள்ளது. இத்துடன் சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு குறைந்ததும் ஆபரணத் தங்கம் விலை குறைவுக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,000 (ரூ.40 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.96,000 (ரூ.320 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,091 (ரூ.44 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,04,728 (ரூ.353 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,000 (ரூ.40 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.96,000 (ரூ.320 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,091 (ரூ.44 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,04,728 (ரூ.353 குறைவு)
Edited by Induja Raghunathan