+

Gold Rate Chennai: தங்கம் விலை 98,000ஐ எட்டி உச்சம் - ஒரே நாளில் ரூ.1,600 உயர்வு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,600 அதிகரித்துள்ளது. வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்த எட்டியுள்ளது. இதற்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி கண்டுள்ளதும் முக்கிய காரணம்.

ஆபரணத் தங்கம் சவரன் விலை ரூ.98,000 என்ற புதிய உச்சத்தை எட்டி, நகை வாங்க விழைவோருக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.12,050 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.96,400 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 உயர்ந்து ரூ.13,146 ஆகவும், சவரன் விலை ரூ.176 உயர்ந்து ரூ.1,05,168 ஆகவும் விற்பனை ஆனது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,600 அதிகரித்துள்ளது. வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்த எட்டியுள்ளது. இதற்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி கண்டுள்ளதும் முக்கிய காரணம். தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (12.12.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.12,250 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,600 உயர்ந்து ரூ.98,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.218 உயர்ந்து ரூ.13,364 ஆகவும், சவரன் விலை ரூ.1,744 உயர்ந்து ரூ.1,06,912 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (12.12.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.6 உயர்ந்து ரூ.215 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.6,000 உயர்ந்து ரூ.2,15,000 ஆகவும் உள்ளது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.37 ஆக இருந்தது. தற்போது மீண்டும் ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இத்துடன் சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,250 (ரூ.200 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.98,000 (ரூ.1,600 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,364 (ரூ.218 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,912 (ரூ.1,744 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,250 (ரூ.200 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.98,000 (ரூ.1,600 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,364 (ரூ.218 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,912 (ரூ.1,744 உயர்வு)


Edited by Induja Raghunathan

More News :
facebook twitter