+

Gold Rate Chennai: தங்கம் விலை மேலும் உயர்ந்து ரூ.1.17 லட்சத்துக்கு விற்பனை!

தங்கம் விலை நேற்று ரூ.800 அதிகரித்த நிலையில், இன்று ரூ.240 உயர்ந்துள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1.17 லட்சம் ஆக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.

தங்கம் விலை இன்று சற்றே மேலும் உயர்ந்ததுள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கவலை தந்துள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 உயர்ந்து ரூ.14,600 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 உயர்ந்து ரூ.1,16,800 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.108 உயர்ந்து ரூ.15,927 ஆகவும், சவரன் விலை ரூ.864 உயர்ந்து ரூ.1,27,416 ஆகவும் விற்பனை ஆனது.

தங்கம் விலை நேற்று ரூ.800 அதிகரித்த நிலையில், இன்று ரூ.240 உயர்ந்துள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1.17 லட்சம் ஆக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (30.5.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.14,630 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.1,17,040 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.15,960 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.1,27,680 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (30.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.290 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,90,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.99 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,630 (ரூ.30 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,17,040 (ரூ.240 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,960 (ரூ.33 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,27,680 (ரூ.264 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,630 (ரூ.30 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,17,040 (ரூ.240 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,960 (ரூ.33 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,27,680 (ரூ.264 உயர்வு)


Edited by Induja Raghunathan

facebook twitter