
ஆபரணத் தங்கம் விலை இன்று மீண்டும் சற்றே உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலை வெகுவாக உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.12,000 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.96,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து ரூ.13,091 ஆகவும், சவரன் விலை ரூ.353 குறைந்து ரூ.1,04,728 ஆகவும் விற்பனை ஆனது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டு வந்தாலும் கூட, தங்கம் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையோ கடுமையாக உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (10.12.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.12,030 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.96,240 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.13,124 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.1,04,992 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (10.12.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.8 உயர்ந்து ரூ.207 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.8,000 உயர்ந்து ரூ.2,07,000 ஆகவும் உள்ளது.

தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.85 ஆக இருந்தது. எனினும், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு உயர்ந்து வருவதால் ஆபரணத் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,030 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.96,240 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,124 (ரூ.33 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,04,992 (ரூ.264 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,030 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.96,240 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,124 (ரூ.33 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,04,992 (ரூ.264 உயர்வு)
Edited by Induja Raghunathan