
தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது நகை வாங்க விழைவோருக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் சவரன் விலை ரூ.67,200 ஆக சரிந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.8,560 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.68,480 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.54 உயர்ந்து ரூ.9,338 ஆகவும், சவரன் விலை ரூ.432 உயர்ந்து ரூ.74,707 ஆகவும் இருந்தது. தற்போது அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (4.4.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.160 குறைந்து ரூ.8,400 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,280 குறைந்து ரூ.67,200 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.174 குறைந்து ரூ.9,164 ஆகவும், சவரன் விலை ரூ.1,392 குறைந்து ரூ.73,312 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (4.4.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.4 குறைந்து ரூ.108 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4,000 குறைந்து ரூ.1,08,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தடுமாற்றத்துடன் காணப்படுகிறது. அதேவேளையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கூடுதல் வரிவிதிப்பு அறிவிப்பும் சர்வதேச அளவில் வர்த்தகப் போக்குகளை ஆட்டம் காணச் செய்துள்ளது. எனினும், தங்கம் விலை தடாலடியாக குறைந்துள்ளது.

பங்குச் சந்தைகள் தடுமாறி வருவதால், பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழலில், சர்வதேச அளவில் தங்கத்தின் ‘சப்ளை’ அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தேவையை எளிதில் பூர்த்தி செய்யும் போக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது. தேவைக்கு அதிகமாக ‘சப்ளை’ கூடுவது உள்ளிட்ட காரணங்களால் இனி வரும் காலங்களில் தங்கம் விலை மேலும் குறையலாம் என்று சர்வதே வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,400 (ரூ.160 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.67.200 (ரூ.1,280 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,164 (ரூ.174 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.73,312 (ரூ.1,392 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,400 (ரூ.160 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.67.200 (ரூ.1,280 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,164 (ரூ.174 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.73,312 (ரூ.1,392 குறைவு)
Edited by Induja Raghunathan