Gold Rate Chennai: சரிந்து கொண்டே வரும் தங்கம் விலை - இன்னைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

12:14 PM Mar 25, 2025 | Gajalakshmi Mahalingam

முதலீட்டாளர்களின் கவனம் பங்குச்சந்தைகள் பக்கம் திரும்பியுள்ள நிலையில், தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக தங்கச் சந்தையிலும் தங்கம் விலை சரிந்து வருகிறது. இரண்டு நாட்களாக ஆபரணத் தங்கம் விலை குறைந்து வருவதால் தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரம் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் திங்கட்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.8,215 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.65,720 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து ரூ.8,962 ஆகவும், சவரன் விலை ரூ.128 குறைந்து ரூ.71,696 ஆகவும் இருந்தது. 2வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்- செவ்வாய்கிழமை (25.3.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 குறைந்து ரூ.8,185 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 குறைந்து ரூ.65,480 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 குறைந்து ரூ.8,929 ஆகவும், சவரன் விலை ரூ.264 குறைந்து ரூ.71,432 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலை: சென்னையில் இன்று (25.3.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,10,000 ஆகவும் மாற்றிமின்றி விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

மார்ச் 25ல் தொடர்ந்து நான்காவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளதற்கு சர்வதேச வர்த்தக வளர்ச்சி முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு வலுவலாக இருப்பதும் தங்கம் விலை குறைந்து வருவதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,185 (ரூ.30 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,480 (ரூ.240 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,929 (ரூ.33 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.71,432 (ரூ.264 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,185 (ரூ.30 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,480 (ரூ.240 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,929 (ரூ.33 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.71,432 (ரூ.264 குறைவு)