+

Gold Rate Chennai: ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி - தங்கம் விலை மீண்டும் மெல்ல மெல்ல உயர்வு!

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளதன் எதிரொலியாக, தங்கம் விலை இன்றும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையோ இன்று புதிய உச்சம் கண்டுள்ளது.

ஆபரணத் தங்கம் விலை சிறுக சிறுக உயர்ந்து வரும் சூழலில், வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.12,030 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.96,240 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.13,124 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.1,04,992 ஆகவும் விற்பனை ஆனது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளதன் எதிரொலியாக, தங்கம் விலை இன்றும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையோ இன்று புதிய உச்சம் கண்டுள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (11.12.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.12,050 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.96,400 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 உயர்ந்து ரூ.13,146 ஆகவும், சவரன் விலை ரூ.176 உயர்ந்து ரூ.1,05,168 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today


வெள்ளி விலை:

சென்னையில் இன்று (11.12.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.209 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 உயர்ந்து ரூ.2,09,000 ஆகவும் உள்ளது.


தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.25 ஆக இருந்தது.

தற்போது மீண்டும் ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இத்துடன் சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு சற்று அதிகரித்துள்ளதால் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,050 (ரூ.20 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.96,400 (ரூ.160 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,146 (ரூ.22 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,168 (ரூ.176 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,050 (ரூ.20 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.96,400 (ரூ.160 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,146 (ரூ.22 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,168 (ரூ.176 உயர்வு)


Edited by Induja Raghunathan

More News :
facebook twitter