+

Gold Rate Chennai: மீண்டும் 'ஷாக்' - - சவரனுக்கு ரூ.400 ஏறிய தங்கம் விலை!

கடந்த இரு தினங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதி நாளில் மீண்டும் உயர்ந்தது, நகை வாங்குவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு தினங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதி நாளில் மீண்டும் உயர்ந்தது, நகை வாங்குவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து மீண்டும் 44,000-ஐ தாண்டியிருக்கிறது தங்கம் விலை.

சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 குறைந்து ரூ.7,990 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 குறைந்து ரூ.63,920 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 குறைந்து ரூ.8,716 ஆகவும், சவரன் விலை ரூ.264 குறைந்து ரூ.69,728 ஆகவும் இருந்தது. தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (8.3.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.8,040 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.64,320 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 உயர்ந்து ரூ.8,771 ஆகவும், சவரன் விலை ரூ.440 உயர்ந்து ரூ.70,168 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (9.3.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.108.10 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,08,100 ஆகவும் விற்பனை ஆகிறது.

gold rate chennai

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பெரிதாக மாற்றமின்றி காணப்படுகிறது. சர்வதேச பங்குச் சந்தை வர்த்தகப் போக்குகள் பாசிட்டிவ், நெகட்டிவ் என மாறி மாறி நிலையற்றத் தன்மையுடன் காணப்படுகிறது. இதனால் தங்கம் மீதான முதலீடு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால், ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,049 (ரூ.50 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,320 (ரூ.400 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,771 (ரூ.55 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.70,168 (ரூ.440 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,049 (ரூ.50 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,320 (ரூ.400 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,771 (ரூ.55 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.70,168 (ரூ.440 உயர்வு)


Edited by Induja Raghunathan

facebook twitter