+

இந்திய MSME-க்கள் தங்கள் நிதி செயல்முறையை தானியங்கிமயமாக்க சில வழிகள் இதோ!

எம்.எஸ்.எம்.இ சூழலில் ஏஐ நுட்பம் சார்ந்த மாற்றம் மேலும் 490 பில்லியன் டாலர் பொருளாதார மதிப்பை உருவாக்கும். எம்.எஸ்.எம்.இ., கள் தங்கள் நிதி செயல்பாடுகளை தானியங்கிமயமாக்குவது தொடர்பாக டிஜிட்டல் சிஎப்.ஓ நிறுவன நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.செருகு ஸ்ரீகாந்த் (Cheruku Srikanth) வழிகாட்டுகிறார்.

எம்.எஸ்.எம்.இ (குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்) நாட்டின் ஜிடிபிக்கு 30 சதவீதம் அளவுக்கு பங்களிப்பு செலுத்துவதாக உலக பொருளாதார அமைப்பின், ’சிறிய வர்த்தகங்களை மாற்றுவது: இந்திய எஸ்.எம்.இ., களுக்கான விதிப்புத்தகம்’ எனும் தலைப்பிலான அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தத் துறை 230 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது, இந்தியாவின் 50 சதவீத ஏற்றுமதியை பூர்த்தி செய்கிறது. 2030ல் 7 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவாகும் இந்தியாவின் இலட்சியத்திற்கு இவற்றின் ஆரோக்கியமும், வளர்ச்சியும் முக்கியம். எம்.எஸ்.எம்.இ சூழலில் ஏஐ நுட்பம் சார்ந்த மாற்றம் மேலும் 490 பில்லியன் டாலர் பொருளாதார மதிப்பை உருவாக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. எனினும், ஏஐ ஏற்பு என்பது குறைவாகவே உள்ளது.

ஏஐ நுட்பம் செயல்திறனை கொண்டு வரும் என்பதை எம்.எஸ்.எம்.இ., புரிந்து கொண்டிருந்தாலும். இதை எப்படி செயல்படுத்துவது என்பதில் பலரிடம் தெளிவு இல்லை.

“எம்.எஸ்.எம்.இ., - கள் அடிப்படையான அமைப்பு சிக்கல்களை எதிர்கொள்வது ஏஐ ஏற்பிற்கான தடையாக அமைகிறது,” என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் டிஜிட்டல் சிஎப்.ஓ நிறுவன நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.செருகு ஸ்ரீகாந்த் கூறுகிறார்.
MSME

சவால்கள்

செயல்திறன் வாய்ந்த முறையிலான ஏஐ ஏற்பிற்கு தடையாக எம்.எஸ்.எம்.இ.,கள் அடிப்படை அமைப்பு சவால்களை எதிர்கொள்கின்றன, என்கிறார் ஸ்ரீகாந்த். செயல்முறைகள் கையால் மேற்கொள்ளப்படுவதாலும், தவறுகள் கொண்டதாகவும் இருப்பதால் நிகழ்நேர தரவுகள் சிக்கலாகின்றன. பல நிறுவனங்களில் முறையான நிதி கட்டுப்பாடுகள் மற்றும் மார்க்கர் –செக்கர் முறை இல்லாதது பிழைகள் கண்டறியப்படாதது மற்றும் விதிகள் பின்பற்றப்படாத செயல்களுக்கு வழிவகுக்கின்றன.

“சீரான முறையில் செயல்படுத்தப்படும் முறையான கணக்கு வழக்குகள், தணிக்கை, நிதி நிர்வாக செயல்முறை இல்லாமல், எம்.எஸ்.எம்.இ., கள் பரிவர்த்தனை வெளிப்பாட்டில் சீரான தன்மை பெற முடியாது மற்றும் இணையான தரவுகள் ஏஐ தானியங்கிமயத்திற்கு அணுக முடியாததாக இருக்கும்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

கணக்கு புத்தகங்கள், தணிக்கை மற்றும் நிதியியல் தகவல் சமர்பிக்க அவசியம். இந்த கட்டத்தில் தவறுகள் பாதிப்பை ஏற்படுத்தி, லெட்ஜர்களை பிழை உண்டாக்கி, விதிகள் செயலாக்கம், ரொக்க அறிக்கை மற்றும் நிர்வாக புரிதலை பாதிக்கிறது.

இரண்டாவதாக, இந்நிறுவனங்கள் திறமை அம்சத்திலும் தடுமாறுகின்றன.

“நல்ல திறமையாளர்கள் பொதுவாக பெரிய நிறுவனங்கள் நோக்கி செல்கின்றனர். எனவே, இந்நிறுவனங்கள் நிர்வாகத்தில் சிக்கலை எதிர்கொள்கின்றன. பல எம்.எஸ்.எம்.இ., கள் அடிப்படை டிஜிட்டல்மயமாக்கலில் தடுமாறுகின்றன.”

சுருக்கமாக சொல்வது என்றால், பல எம்.எஸ்.எம்.இ.கள் தானியங்கிமயமாக்கத்திற்கு செல்வதற்கு முன், அடிப்படைகளில் கவனம் செலுத்த வேணிடியிருக்கிறது. ஏஐ நுட்பத்திற்கு மாறுவது பற்றி கேட்கவே வேண்டாம்.

அடிப்படைகள்

தானியங்கிமயம் மற்றும் ஏஐ அவற்றுக்கான தரவுகள் சார்ந்தே இருக்கும். பல எம்.எஸ்.எம்.இ., களுக்கு மிகப்பெரிய பிரச்சனை கணக்கு புத்தக பராமரிப்பு தான். சீரில்லாத லெட்ஜர்கள், காணாமல் போகும் ரசீதுகள், தற்காலிகள் பதிவுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இத்துறை அமைச்சகத்தின் 2024 அறிக்கையின் பிடி, 65 சதவீத நிறுவனங்கள் இன்னமும் பாரம்பரிய கணக்கு புத்தக முறையை பின்பற்றுகின்றன. அதே நேரத்தில், டிஜிட்டலுக்கு மாறியவர்கள் 40 சதவீத மேம்பாட்டை ரொக்க வரத்து நிர்வாகத்தில் அடைந்துள்ளனர்.

எம்.எஸ்.எம்.இ.,-கள் தானியங்கிமயத்தை ஆய்வு செய்யும் போது, நடைமுறை யதார்த்தம் பற்றிய புரிதல் இல்லாத பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட நிதி நுட்ப கருவுகளை எதிர்கொள்ள நேர்கிறது.

“தவறுகள் மற்றும் சரியாக்க வேண்டிய அம்சங்கள் கொண்ட தரவுகளில் இந்த ஏஐ கருவுகளை எம்.எஸ்.எம்.இ.,கள் பயன்படுத்த வேண்டும், என எதிர்பார்க்கின்றனர்,” என்கிறார் ஸ்ரீகாந்த்.

எனவே, டிஜிட்டல்மயமாக்கலை, கணக்கு புத்தக பராமரிப்பில் இருந்து துவங்க வேண்டும்.

“அதன் பிறகு, நிகழ்நேர, துல்லியமான, விதிகளுக்கு ஏற்ற நம்பகமான தரவுகளை உருவாக்க இவை உதவும்,” என்கிறார்.

ஜோஹோ, ஜெரோதா, நெட்ஸ்யூட், ஊடோ, குவிக்புகஸ் ஆகியவை புது யுகத்திற்கான தணிக்கை சேவைகளாக அமைகின்றன.

தொழில்

டேலி போன்ற பாரம்பரிய மென்பொருள்களுக்கு தணிக்கை அனுபவம் மற்றும் மனித தலையீடு அவசியம், என்கிறார். பல தருணங்களில் எம்.எஸ்.எம்.இ.,-கள் கணக்குகள், முறையான கல்வி அல்லது பயிற்சி இல்லாதவர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

“இவர்களைப் பொருத்தவரை, கணக்கு புத்தக செயலி எளிதாக பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அந்த மென்பொருளை பயன்படுத்தும் முன் வேறு ஒரு பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையில் இருக்கக் கூடாது. மேலும், மென்பொருள் மேம்படுத்தப்பட்டால் அல்லது வேறு வடிவம் வந்தால் சவால்கள் உண்டாகலாம்.”

எனவே, எளிமையாக உள்ள, ஒருங்கிணைந்த டிஜிட்டல் கருவிகளை தேர்வு செய்ய வேண்டும். குறைந்த மனித உள்ளீடு தேவைப்பட்டால் தவறுகள் குறையும்.

தரவுகள் சீரமைப்பு

துல்லியம் மற்றும் விதிகளை பின்பற்றுவது முக்கிய தடைகளாக இருப்பதால், ஒருங்கிணைந்த மற்றும் அமைப்பு நோக்கிலான நிதி தரவு அடுக்கை உருவாக்குவதற்கு ஸ்ரீகாந்த் வழிகாட்டுகிறார்.

ரசிதுகள், இன்வாய்ஸ்களை டிஜிட்டல்மயமாக்கி, அவை தானாக பதிவாக ஏற்பாடு செய்ய வேண்டும். தொடர்புடைய துணை தரவுகள் தெளிவாக இருக்க வேண்டும். மனித தலையீடு தேவையை குறைத்து தரவுகள் தூய்மையை பாதுகாக்கும் உராய்வு இல்லாத கருவிகளை பயன்படுத்த வேண்டும்.

தணிக்கை மற்றும் தகவல்கள் சமர்பிக்க ஏற்ற வகையில் அரசு அமைப்புகளுடன் முறையாக இணைக்கவும். நம்பகமான தணிக்கை கணக்கு புத்தக வெளிப்பாட்டிற்கான கருவுகளை பயன்படுத்தவும்.

வரைவு திட்டம்

தணிக்கை, கொள்முதல், ரொக்க வரத்து மற்றும் பிரச்சனைகளை சரி செய்வது உள்ளிட்டவற்றை தானியங்கியமாக்குவதற்கான வழியையும் முன்வைக்கிறார். கணக்கு புத்தகம், தணிக்கை, நிதி நிர்வாகம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக அல்லாமல் ஒற்றை ஒருங்கிணைந்த மேடை, நிகழ்வு சார்ந்த தரவு சேகரிப்பு உள்ளார்ந்த அறிவுத்திறன் கொண்டது.

வாடிக்கையாளர், வரி அல்லது கையிருப்புக்கு ஏற்ப தானாக செயல்படும் திறன். நுழைவு புள்ளியில் தவறுகளை தவிர்க்க தானியங்கி உள் கட்டுப்பாடு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஆவண, தணிக்கை பதிவுகள் நிகழ் நேர ஏபி (செலுத்தக்கூடிய கணக்கு)/ ஏஆர் (வரக்கூடிய கணக்கு) ஆகியவற்றுக்கான தானியங்கிமயம். தொடர் பிரச்சனை தீர்வு

“இது தூய்மையான, துல்லியமான, விதிகளுக்கு ஏற்ற, இயந்திரங்கள் வாசிக்கக் கூடிய தரவுகளை உருவாக்கும். இது தான் ஏஐ நுட்பத்திற்கு அடிப்படை,” என்கிறார்.

அவர் மேலும் நான்கு கட்ட ஏற்பு திட்டத்தைம் முன்வைக்கிறார்.

கட்டம்  1: டிஜிட்டல் அடித்தளம். கிளவுட் கணக்கு புத்தக பராமரிப்பு, தானியங்கி ஜிஎஸ்.டி/எல்.எஸ்.ஜி, தானியங்கி ஏஆர்/ஏபி, உள்ளார்ந்த கட்டுப்பாடு ஆகியவை அடங்கும்.

கட்டம்2:  செயல்முறை தானியங்கிமுறை. பிரச்சனை சரி செய்தல், இன்வாய்ஸ் செயமுறை, பணி செயல்முறை, கையிருப்பு ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும்.

கட்டம் 3: கணிப்பு சார்ந்த புரிதல், ரொக்க வரத்து கணிப்பு, கொள்முதல், லாப விகித அலசல். வசூல் முன்னுரிமை.

கட்டம் 4: தானியங்கி நிதி, ஏஐ சார்ந்த பரிவர்த்தனை செயலாக்கம், பிழைகள் கண்டறிதல், நிகழ்நேர சூழல் மாதிரி.

பலன்கள் ஆய்வு

பல எம்.எஸ்.எம்.இ., கள், அளவிடக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பதில்லை. இத்தகைய இலக்குகள் செயல்முறை திறனை நேரடியாக மேம்படுத்தும். இவற்றின் முக்கிய அம்சங்கள்:

  • கணக்கு புத்தகம் மற்றும் தணிக்கையில் செயல்முறை நேரம் குறைவு
  • புரிதல்கள், முடிவெடுத்தல் அறிக்கைகளுக்கு வேகமான அணுகல்
  • TDS/GST விதிகள் பின்பற்றலில் அதிகபட்ச துல்லியம்
  • குறித்த காலத்திலான கணக்கு முடித்தல்
  • செயல் மூலதன செயல்திறன்
  • குறுகிய காலத்தில் பிரச்சனைக்கு தீர்வு காணுதல்
  • சரியான கருவிகள் தேர்வு

இறுதியாக, சர்வதேச சாஸ் கருவிகள் இருந்தாலும் உள்ளூரில் ஒரு இடைவெளி இருக்கிறது, என்கிறார்.

இந்தியாவை மையமாகக் கொண்ட ஏஐ கருவிகளுக்கு தேவையான அம்சங்கள்:

  • வல்லுனர் அல்லாதவர்களுக்கான உரையாடல் இடைமுகம்,
  • ஜிஎஸ்டி, டிடிஎஸ், மின் இன்வாய்சிங், தணிக்கை பதிவுக்கான விதிகள் அறிவுத்திறன்
  • இணைய தொடர்பு குறைவாக உள்ள பகுதிகளுக்கான ஆப்லைன் - ஆன்லைன் வசதி
  • பல பங்குதாரர் வலைவாசல்
  • MSME-ஆதரவான கடணம் (ஆண்டுக்கு ரூ. 20,000 குறைவாக).

அடிப்படை கணக்கு புத்தக தானியங்கிமயம், விதிகள் சார்ந்த ஏஐ, கருப்பு பெட்டி அல்லாத மாதிரிகள், மனித தலையீடு அனுமதி, பதிவுகள் வாயிலாக பொறுப்பேற்பு, படிப்படியான தானியங்கிமயம் ஆகியவற்றுக்கு ஏற்ற அணுகுமுறை, என்கிறார்.

பணி செயல்முறைகளில், பதிவேடு, ஜிஎஸ்டி, விதிகள் பின்பற்றல், ஏஆர் நடவடிக்கைகள், இன்வாய்ஸ் செயல்முறை, மூன்று வழி பொருத்தம், ரொக்க வரத்து கணிப்பு, செலவு கோரிக்கை, கையிருப்பு, உள்ளார்ந்த நிதி கட்டுப்பாடு ஆகியவை ஏஐ சார்ந்த தானியங்கி முறைக்கு ஏற்றவை.

இறுதியாக

யுபிஐ க்கு நிகரான தரவு ஸ்டேக் இந்திய எம்.எஸ்.எம்.இ,களுக்கு தேவை, என்கிறார் ஸ்ரீகாந்த்.

விதிகள் பின்பற்றல் அமைப்பிற்கான திறந்தவெளி அமைப்பு, வங்கிகளிடம் இருந்து நிகழ்நேர தரவு அமைப்புகள், மாற்றக்கூடிய ஏபிஐ, தொழில் அமைப்புகளின் ஆதரவு தேவை, என்கிறார்.

“இந்த நான்கும் கூட்டாக செயல்படும் போது, எம்.எச்.எம்.இ-களின் ஏஐ ஏற்பு வேகமாக இருக்கும்,” என்கிறார்.

ஏஐ திறன் எம்.எஸ்.எம்.இ.,களின் நிதி எதிர்காலத்தை வடிவமைக்கும் என்றும் வலியுறுத்துகிறார்.  

ஆங்கிலத்தில்: டெபோலினா பிஸ்வாஸ், தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan

More News :
facebook twitter