+

ஐஐடி மெட்ராஸின் ‘Ideas to Impact' டெமோ டே — சுற்றுச்சூழலை பாதுகாக்கும் 38 பசுமை புத்தாக்க ஐடியாக்கள் காட்சி!

நாட்டின் சுற்றுச்சூழலிய நிலைத்தன்மை தரவரிசையில் (NIRF Sustainability Ranking) முதலிடத்தை பெற்றுள்ள ஐஐடி மெட்ராஸ் உலக சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தினத்தை (World Sustainability Day) முன்னிட்டு ‘ஐடியாஸ் டூ இம்பாக்ட்’ (i2I) சவாலின் இரண்டாவது பதிப்பின் கிராண்ட் டெமோ டே நிகழ்வைச் சிறப்பாக கொண்டாடியது. இ

நாட்டின் சுற்றுச்சூழலிய நிலைத்தன்மை தரவரிசையில் (NIRF Sustainability Ranking) முதலிடத்தை பெற்றுள்ள ஐஐடி மெட்ராஸ் உலக சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தினத்தை (World Sustainability Day) முன்னிட்டு ‘ஐடியாஸ் டூ இம்பாக்ட்’ (i2I) சவாலின் இரண்டாவது பதிப்பின் கிராண்ட் டெமோ டே நிகழ்வைச் சிறப்பாகக் கொண்டாடியது.

இந்நிகழ்வில், இந்தியா முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 38 மாணவர் புதுமையாளர்கள் உருவாக்கிய சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் நிலைத்த வளர்ச்சி, சர்க்குலர் எக்கானமி மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தாங்கும் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை.

நிகழ்ச்சியை ஐஐடி மெட்ராஸ் ’ஸ்கூல் ஆஃப் சஸ்டைனபிலிட்டி’யின் கீழ் செயல்படும் 'சஸ்டைனபிலிட்டி வென்ச்சர் ஸ்டுடியோ' (Sustainability Venture Studio) ஒருங்கிணைத்தது. இந்த முயற்சி, கல்லூரி மாணவர்களும் தொடக்கநிலை புதுமையாளர்களும் தங்கள் யோசனைகளை சந்தைக்குத் தகுந்த தொழில்நுட்பங்களாக மாற்ற உதவுகிறது.

விழாவில் முக்கிய விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சிறப்பு செயலர் அனுராக் மிஸ்ரா, ஐஏஎஸ் கூறும்போது,

“தமிழ்நாடு அரசின் Sustain TN திட்டம், காலநிலை மாற்றத்துக்கு எதிராக புதுமை வழியாக போராடும் முன்னோடி முயற்சி ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் 10 தொழில்முனைவோருக்கு தலா ரூ.10 லட்சம் விதை நிதி வழங்கப்படும். புதுமை மற்றும் தொழில் முனைவுத்தன்மையில் முன்னணியில் உள்ள ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து செயல்படுவது பெருமையாகும்,” என்றார்.

ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது,

“காலநிலை மாற்றம் என்பது அனைவரும் சேர்ந்து கையாள வேண்டிய உலகளாவிய சவாலாகும். டெமோ டே போன்ற நிகழ்வுகள், புதுமையாளர்களும் முதலீட்டாளர்களும் நேரடியாக தொடர்பு கொள்ளும் மேடையாக விளங்குகிறது. இத்தகைய வாய்ப்புகள் தான் சிறந்த யோசனைகளை சந்தைக்கு கொண்டு செல்லும் பாதை,” என்றார்.
Prof. Indhumathi

பேரா. இந்துமதி நம்பி, 'Ideas to Impact' ஒருங்கிணைப்பாளர் மற்றும் சிவில் பொறியியல் துறை பேராசிரியர் கூறும்போது,

“சுற்றுச்சூழலைப் பாதிக்காத நட்புரீதியிலான உற்பத்தி மற்றும் சர்க்குலர் எகானமியை முன்னேற்றுவதற்கு பாதுகாப்பான மற்றும் நிலையான வடிவமைப்புகள் அவசியம். Ideas to Impact திட்டம், இளம் தலைமுறையின் படைப்பாற்றலான யோசனைகளை சமூகத்துக்கு பயனுள்ள புதுமையாக்கங்களாக மாற்ற வழிகாட்டுகிறது,” என்றார்.

ஸ்டார்ட்-அப் விதை நிதி:

இரண்டாவது பதிப்பில் நாடு முழுவதும் இருந்து 3,500க்கும் மேற்பட்ட பதிவுகள் கிடைத்துள்ளன (2024-இல் 2,500). இவற்றில் 18 இறுதி அணிகள் தங்கள் முன்மாதிரிகளை (Prototypes) இன்று காட்சிப்படுத்தின. இவற்றில் முதல் 10 அணிகளுக்கு தலா ரூ.1 லட்சம் விதை நிதி வழங்கப்படும். மேலும், ஐஐடி மெட்ராஸ் இன்க்யுபேஷன் ஆதரவும் வழங்கப்படுகிறது.

தொழில் துறையின் பார்வையைப் பகிர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சுற்றுச்சூழல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புத் தலைவர் டாக்டர் பலவேசா முருகன்,

“மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றம் கடந்த இரு நூற்றாண்டுகளாக உருவானது. இதைத் தீர்க்க உலகின் 8.2 பில்லியன் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்தியா 2047 ஆம் ஆண்டில் $30 டிரில்லியன் பொருளாதார இலக்கை நோக்கி நகரும் நிலையில், வளர்ச்சியும் பசுமையும் இணைந்து செல்ல வேண்டும்,” என்றார்.

i2I 2.0 திட்டம், ஐஐடி மெட்ராஸின் முக்கியமான Carbon Zero Challenge (CZC) முயற்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை கார்பன் ஜீரோ சேலஞ்ச் வழியாக ரூ.5 கோடி நிதியுதவியுடன் 100க்கும் மேற்பட்ட முன்மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

IIT madras demo day

இதுவரை 38 அணிகள் தொழில்முனைவுத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளன, அதில் 13 பசுமை ஸ்டார்ட்அப்புகள் தற்போது கழிவு மேலாண்மை, வேளாண்மை, நீர், ஆற்றல், நிலைத்த பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் வெற்றிகரமாக செயல்படுகின்றன.

மேலும், Carbon Zero Challenge மற்றும் NIRMAAN (ஐஐடி மெட்ராஸ் முன்-இன்க்யுபேஷன் மையம்) இணைந்து பணியாற்றுவதன் மூலம் இத்தகைய புதுமைகள் தேசிய மற்றும் உலகளாவிய அளவில் பரவுவதற்கு வழி வகுக்கப்படுகிறது.

ஐஐடி மெட்ராஸ் சுற்றுச்சூழல் மற்றும் பசுமை நிலைத்தன்மைக்கான பள்ளி, பல்துறை ஆராய்ச்சி, கல்வி மற்றும் புதுமை முயற்சிகளுக்கான மையமாக விளங்குகிறது. இங்கு செயல்படும் Sustainability Venture Studio மற்றும் Carbon Zero Challenge போன்ற முயற்சிகள், தொழில்நுட்பத்தின் மூலம் நிலையான உலகை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

More News :
facebook twitter