
இணையதள தொழில்முறை வலையமைப்பான லிங்க்ட்இன்-ற்கு அடுத்த 2-3 ஆண்டுகளில் இந்தியா மிகபெரியச் சந்தையாக மாறும், என்று அதன் கண்ட்ரி மேனேஜர் குமரேஷ் பட்டாபிராமன் கணித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில், இந்தியாவில் Linkedin உறுப்பினர் எண்ணிக்கை 50%-க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, வருமானம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
60% வீடியோ அப்லோடுகள் இந்தியாவிலிருந்து உருவாகின்றன – இது உலக அளவில் மிக அதிகமானது. தொழில்முறையில் வீடியோவின் மூலம் பகிர்வும், பயிலவும், நெட்வொர்க்கிங்கும் முக்கியமான பங்கு வகிக்கின்றன.
வேலை தேடுபவர்கள் தங்கள் சொந்த வார்த்தைகளில் தேட முடியும் வகையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வேலை தேடல் முறையை லிங்க்ட்இன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில், 'Open to Work' பகுதியில்தான் முதன்முறையாக Notice Period மற்றும் எதிர்பார்க்கப்படும் சம்பளம் (expected salary) போன்ற விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனை 15 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வருகிறார்கள். லிங்க்டுஇன் இந்திய உறுப்பினர்களில் 30 சதவீதத்தினர் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகப் (Small and Medium Business) பிரிவில் இருப்பவர்கள். வேலைவாய்ப்பு, ப்ராண்டிங் மற்றும் வளர்ச்சி போன்ற அம்சங்களில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் புதிய கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கு வெளியே, லிங்க்ட்இனின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் பெங்களூருவில் உள்ளது. இங்கு, Talent Solutions, Learning, Premium Subscriptions, Marketing Solutions உள்ளிட்ட பல துறைகளுக்கான வளர்ச்சி நடக்கிறது.
லிங்க்ட்இன் தற்போது விரிவான முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. செயற்கை நுண்ணறிவு, உள்கட்டமைப்பு, ஊழியர் உற்பத்தித் திறன், என அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) செய்கின்றனர்.
சந்தை விரிவாக்கம் குறித்தாயும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது.
"இந்தியர்களின் ஆற்றலும், தனித்துவமான திறமையும் உலகளவில் ஒப்பற்றவை. இது தான் இந்தியா, தொழில்முறை உலகத்தின் எதிர்காலத்தை காட்டும் ஒளிக்குறி," என குமரேஷ் பட்டாபிராமன் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.
அவர் மேலும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது,
“இந்தியாவுக்காக தீர்வுகளை உருவாக்குவது என்பது, உலகளாவிய 1.2 பில்லியன் உறுப்பினர்களுக்குமான தீர்வுகளாக அமைகிறது, லிங்க்ட்இனுக்கான இரண்டாவது மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சந்தையாகவும் இந்தியா இருந்து வருகிறது. 16 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இதற்கு உள்ளனர்.“
இந்தியா என்பது உலக வேலை வாய்ப்பின் எதிர்காலம் என்றே கூற வேண்டும். அதாவது, இந்தியாவின் டிஜிட்டல்-முன்னணி, உயர்வை நோக்கிய இளம் தொழிலாளர்கள், புதியது குறித்த அறிதல் வேண்டும் என்பதில் கடுமையாக உழைக்கும் பண்பாடு, மற்றும் நம்பிக்கையை வழங்கும் லிங்க்ட்இன் சமூகம் இங்கு சிறப்பாக செயல்படுவதற்கான முக்கிய காரணங்கள்,” என்றார்.
தமிழில்: முத்துகுமார்