உலகின் முதல் ஸ்மார்ட் ரிங் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதியை அறிமுகம் செய்துள்ளது Muse wearables

11:34 AM Oct 14, 2025 | cyber simman

இந்தியாவின் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் 'மியூஸ் வியரபில்ஸ்' (Muse Wearables) தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனுடன் இணைந்து இந்தியாவின் முதல் வியரபில் பேமெண்ட் சூழலை அறிமுகம் செய்துள்ளது. மியூஸ் வேலட் மற்றும் ரூபே நெட்வொர்க் அடிப்படையில் இந்த சேவை இயங்குகிறது.

More News :

 

இந்த புதிய சேவை பயனாளிகள் தங்களது நேர்த்தியான 'ரிங் ஒன் ஸ்மார்ட் ரிங்' வாயிலாக உடனடியாக பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்ய உதவுகிறது. வேறு எந்த என்.எப்.சி சார்ந்த பிஓஎஸ் டெர்மினலிலும் இந்த வசதி செயல்படும். இதற்கு, போன் அல்லது கார்டு அல்லது வாலெட் தேவையில்லை.

 

ஏற்கனவே 40க்கும் மேலான நாடுகளில், 600க்கும் மேலான வங்கிகளின் கார்டுகளில் இந்த சேவை இயங்குகிறது. தற்போது மியூஸ் வாலெட் இந்தியாவில் ரூபே நெட்வொர்க் மூலம் அறிமுகம் ஆகி, இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பயனாளிகளுக்கு பாதுகாப்பான, எளிதான டிஜிட்டல் பேமெண்ட் வசதியை சாத்தியமாக்குகிறது. 

பெங்களூருவை தலைமையமாகக் கொண்டு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர பகுதிகளில் செயல்பாடு கொண்ட மியூஸ் வியரபில்ஸ், அழகான, செயல்திறன் மிக்க சேவைகளை உருவாக்கும் ஆழ் நுட்ப நிறுவனமாக விளங்குகிறது.

முழுவதுமாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்படும் இதன் தொழில்நுட்பம், இந்தியாவில் இருந்து உலகிற்கு உருவாக்கும் சாதனையாக அமைகிறது.

 “இந்தியாவுக்கான இறையாண்மை மிக்க மாற்று சேவையை உருவாக்கியதன் மூலம் டிஜிட்டல் வாலெட் பரப்பில் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களை எதிர்கொள்கிறோம். உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் இந்தியாவில் உருவாக்கப்பட முடியும் என இது நிரூபிக்கிறது. மியூஸ் வாலெட் மூலம் ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேலும் எளிதாக்குகிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கான ரூபே கார்டு பயனாளிகளுக்கு வியரபில் பேமெண்ட் வசதியை சாத்தியமாக்க உள்ளோம்,” என்று மியூஸ் வியரபில் இணை நிறுவனர் மற்றும் சி.எப்.ஓ.சாய் பிரசாந்த் கூறியுள்ளார்.

மியூஸ் வாலெட்

இந்த சேவைக்கு அடிப்படையாக ஆழ்நுட்ப மேடையான மூஸ் வாலெட் அமைகிறது. இது, ரிங் ஒன் சாதனத்தின் வாயிலாக டோகனாக்கப்பட்ட வன்பொருள் சார்ந்த பாதுகாப்பான பரிவர்த்தனையை சாத்தியமாக்குகிறது. தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் மற்றும் ரூபேவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பாதுகாப்பான எலிமெண்ட் டோக்கனாக்க மேடையாக விளங்குகிறது.

இந்த வாலெட், ரூபே கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பாதுகாப்பான டிஜிட்டல் டோக்கனாக மாற்றப்பட்டு, ஊடுருவ முடியாத சிப்பில் சேமிக்கப்பட வழி செய்கிறது. வங்கி மற்றும் பாஸ்போர்ட் அமைப்பில் பயன்படுத்தப்படும் வன்பொருளுக்கு நிகரானது இது.

“நலம், பாதுகாப்பு மற்றும் வசதியை ஒருங்கிணைத்து அழகிய வடிவில் அளிப்பது எங்கள் நோக்கம். மியூஸ் வாலெட் மூலம் இந்தியாவின் முதல் பாதுகாப்பான டோக்கன் சார்ந்த உடனடி பரிவர்த்தனை வசதியை அளிக்கிறோம். இதற்கு போன் அல்லது வாலெட் தேவையில்லை,” என நிறுவன இணை நிறுவனர் மற்றும் சி.ஓ..ஓ.பிரத்யூஷா காமராஜக்டா கூறியுள்ளார்.

“இந்த சேவைக்கான சர்வதேச வரவேற்பு அருமையாக உள்ளது. ஏற்கனவே 40 நாடுகளில், 600 வங்கிகளின் மாஸ்டர் கார்டு நெட்வொர்க்கில் செயல்பட்டு வருகிறோம். ரூபே ஒருங்கிணைப்பு மூலம் இந்தியாவில் வழங்குகிறோம்,” என நிறுவன உலக வர்த்தக துணைத்தலைவர் சாஹில் அஜய் சவுத்ரி கூறியுள்ளார்.

செயல்முறை:

➢      மியூஸ் செயலியில் பயனாளிகள் ரூபே கார்டை சேர்க்க வேண்டும்.

➢      வாலெட் ரூபேட் நெட்வொர்க்கை தொடர்பு கொண்டு, கார்டுக்கான தனித்துவமான டோக்கனை உருவாக்கும்.

➢      டோக்கன் பாதுகாப்பாக, ரிங் ஒன் சாதனத்தில் மாற்றப்பட்டு, என்கிரிப்ட் செய்து சேமிக்கப்படும்.

➢      இந்த ரிங்கை என்.எப்.சி டேர்மினலில் டேப் செய்யும் போது, கார்டு எண்ணை வெளிப்படுத்தாமல் பாதுகாப்பாக பரிவர்த்தனை நிகழ்கிறது.

➢      இந்த வன்பொருள் விலக்கல், இந்தியாவில் வியரபில் பாதுகாப்பில் முக்கிய அளவுகோளாகிறது.

➢       இந்த ரிங்கை அணிந்திருக்கும் போது மட்டுமே பரிவர்த்தனை இயங்கும். ரிங்கை அகற்றினால் செயல்படாது. ரிங் காணாமல் போனாலும், முறையான அங்கீகாரம் இல்லாமல் செயல்படாது.


Edited by Induja Raghunathan