+

'ஜிஎஸ்டி சீர்திருத்தம் பொருட்களின் விற்பனையை அதிகரித்துள்ளது'– நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு செப்டம்பர் 22-ம் தேதி முதல் ஆட்டோமொபைல் தொடங்கி மின்வணிகம் வரையிலும் அனைத்துத் துறைகளிலும் விற்பனை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், ஜி

ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு செப்டம்பர் 22-ம் தேதி முதல் ஆட்டோமொபைல் தொடங்கி மின்வணிகம் வரையிலும் அனைத்துத் துறைகளிலும் விற்பனை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து இவ்வாறு பேசியுள்ளார். மேலும், ஜிஎஸ்டி செயல்முறைகளை தொடர்ந்து எளிமையாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றார். கட்டணங்கள் குறைக்கப்பட்டிருப்பதையும் தயாரிப்புகளை வகைப்படுத்துவதும் எளிமையாக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார்.

GST
“தற்போது 5%, 18% என இரண்டு (ஜிஎஸ்டி) கட்டணங்கள் மட்டுமே உள்ளன,” என்றார்.

சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறித்து குறிப்பிடுகையில்,

“மிகவும் ஆடம்பரமான பொருட்களாகக் கருதப்படும் தயாரிப்புகளுக்கு 40% வரை வரி விதிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் இந்தப் பிரிவின்கீழ் வரும்,” என்றார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு சீர்திருத்தம் செய்யப்பட்டதன் விளைவாக, இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.4% வளர்ச்சியடையும், என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் (NIPFP) மதிப்பீட்டை சுட்டிக்காட்டி, 'பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ தெரிவித்துள்ளது.

“ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு ஏசி விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது. 43 மற்றும் 55 இன்ச் தொலைக்காட்சிகளின் விற்பனை 30-35% அதிகரித்திருப்பதாக தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் எங்களிடம் தெரிவித்திருக்கின்றனர்,” என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.

வீட்டில் சிறிய டிவி வைத்திருந்தவர்கள் ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு, பெரிய டிவி வாங்கி பயனடைந்துள்ளனர் என்றார். மேலும், மின்வணிக தளங்களில் செயல்படுவோர் 20% வரை விற்பனை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

ஆட்டோமொபைல் விற்பனையைப் பொறுத்தவரை, ஜிஎஸ்டி சீர்திருத்தம் அறிவிக்கப்பட்ட மறுநாளில் இருந்து நாடு முழுவதும் உள்ள சில்லறை வர்த்தக நெட்வொர்கில் 80,000-க்கும் அதிகமான விசாரணைகள் பெறப்பட்டதாக மாருதி சுசூகி நிறுவனம் தரப்பில் பகிரப்பட்டதையும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

“வர்த்தகர்கள் பலனடையும் வகையில் ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குவது பற்றியும் ஆராய்ந்து வருகிறோம்,” என்றார்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள கோயமுத்தூர் சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்குள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டிற்கு சென்று வாடிக்கையாளர்களிடமும் ஊழியர்களிடமும் பேசியுள்ளார். நிதியமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் இந்த படங்கள் பகிரப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் காரணமாக ஷாம்பூ, டூத்பேஸ்ட், உணவுப் பொருட்கள் என அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை குறைந்துள்ளதாக மக்கள் நிதியமைச்சரிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

”ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் காரணமாக பல்வேறு பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அத்துடன் ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்,” என்று அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் உதவி: பிடிஐ மற்றும் இதர வெளியீட்டாளர்கள் | தமிழில்: ஸ்ரீவித்யா

More News :
facebook twitter