+

பான், ஆதார் விவரங்கள் வேறுபாட்டால் ஏற்படும் சிக்கல் - திருத்தம் செய்து லின்க் செய்வது எப்படி?

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது.   இந்த சூழலில் அதில் உள்ள பெயர் அல்லது பிறந்த தேதி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் பொருந்தாமல் போனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது சிக்கல் ஏற்படும். குறிப்பாக வருமான வரி கணக்கு தாக்கல் சஸ்பெண்ட் ஆகலாம், பான் கார்

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது அவசியம், என மத்திய அரசு பலமுறை கூறியுள்ளது.  

இந்த சூழலில் அதில் உள்ள பெயர் அல்லது பிறந்த தேதி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் பொருந்தாமல் போனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது சிக்கல் ஏற்படும். குறிப்பாக வருமான வரி கணக்கு தாக்கல் சஸ்பெண்ட் ஆகலாம், பான் கார்டு செயலிழக்கலாம் அல்லது ரீ-ஃபண்ட் தாமதம் ஆகலாம். இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம். 

aadhaar pan link

பான் கார்ட் - ஆதார் இணைப்பு சிக்கல்

பெயர் அல்லது பிறந்த தேதி பொருந்தாமல் போவதற்கான காரணம் என்ன? - பொதுவாக பெயர் அல்லது பிறந்த தேதி உள்ளிட்டவற்றில் பிழை ஏற்பட எழுத்துப் பிழை, பெயர் அமைப்பில் உள்ள வேறுபாடு, நீளமான அல்லது குறுகிய பெயர், பிறந்த பெயர் அல்லது திருமண பெயர், பிறந்த தேதி அல்லது ஆண்டில் உள்ள வேறுபாடு உள்ளிட்டவை பொருந்தாமல் போவதற்கான காரணமாக இருக்கும். 

உதாரணமாக பான் கார்டில் ‘வேல்முருகன் சங்கர்’ என்றும், ஆதார் கார்டில் ‘வேல்முருகன்’ என்று இருந்தால் பெயர் பொருந்தாமல் போகும். இதேதான் பிறந்த தேதி அல்லது ஆண்டுக்கும். அதில் வேறுபாடுகள் இருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும். 

பான் கார்டில் பெயர் அல்லது பிறந்த தேதியை திருத்துவது எப்படி? - பான் கார்டில் பயனர் ஒருவரது விவரத்தில் பிழை இருந்தால் அதை ஆன்லைன் மூலம் திருத்தம் செய்யலாம். NSDL e-Gov அல்லது UTIITSL வலைதளத்தின் மூலம் அதை திருத்தம் செய்யலாம்.

  • அந்த தளத்தில் ‘லாக்-இன்’ செய்து ‘பான் தரவில் மாற்றம்/திருத்தம்’ என்ற ஆப்ஷன் மூலம் திருத்தம் செய்யலாம். 

  • இதற்கு ஆதாரமாக அடையாள அட்டை, பிறந்த தேதிக்கான சான்று, முகவரிக்கான சான்று உள்ளிட்டவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

  • அதற்கான கட்டணமாக சிறிய தொகையை செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப எண்ணை கொண்டு அதன் நிலையை டிராக் செய்து அறியலாம். திருத்தம் செய்யப்பட்ட பான் கார்டு 15 முதல் 20 நாட்களுக்குள் பயனருக்கு கிடைக்கும். 

ஆதாரில் பெயர் அல்லது பிறந்த தேதியை திருத்துவது எப்படி? - UIDAI தளத்தில் பயனர்கள் ஆதார் விவரங்களை திருத்தம் செய்யலாம்.

  • இதற்கு பள்ளி சான்றிதழ், பாஸ்போர்ட், பிறப்பு சான்று போன்றவற்றை பயன்படுத்தி ஆன்லைனில் திருத்தம் செய்யலாம்.

  • அருகில் உள்ள ஆதார் சேவை மையம், தபால் நிலையம் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக பெயர் அல்லது பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை திருத்தம் செய்யலாம்.

சரிபார்ப்புக்கு பின்னர் திருத்தம் செய்யப்பட்ட விவரம் சில நாட்களில் ஆதாரில் அப்டேட் ஆகும். 

pan aadhaar edit

திருத்தத்துக்கு பின்னர் பான் மற்றும் ஆதார் கார்டை லிங்க் செய்ய வேண்டும்: பான் மற்றும் ஆதாரில் இடம்பெற்றுள்ள விவரங்கள் ஒப்பான பின்னர் மின்னணு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தளத்தில் ‘லிங்க் ஆதார்’ ஆப்ஷன் மூலம் பான், ஆதார் விவரம், ஆதாரில் உள்ள பெயர் உள்ளிட்டு, அதை ஓடிபி மூலம் சரிபார்க்க வேண்டும். இதன் மூலம், பான் கார்டை ஆக்டிவ் செய்யவும், அபராதங்களில் இருந்து தப்பிக்கவும் முடியும். இதை வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன்பு மேற்கொண்டால் அலைச்சலை தவிர்க்கலாம். 

கவனத்தில் கொள்ளவும்… 

  • பான் மற்றும் ஆதாரை லிங்க் செய்யாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. 
  • பான் கார்டில் செய்யப்படும் திருத்தங்கள் அப்டேட் ஆக 2 அல்லது 3 வாரங்கள் வரை ஆகும். ஆதாரில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் சரிபார்ப்புக்கு பின் அப்டேட் ஆகும். 
  • பான் மற்றும் ஆதாரை லிங்க் செய்யவில்லை என்றால் அதற்கு அபராதமாக ரூ.1,000 செலுத்தி லிங்க் செய்யலாம். 


Edited by Induja Raghunathan

facebook twitter