
மத்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை டிஜிட்டல் பேங்கிங் சேனல்கள் தொடர்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு (REs) ஏழு புதிய மாஸ்டர் டைரெக்ஷன்களை வெளியிட்டது. வர்த்தக வங்கிகள், சிறு நிதி வங்கிகள் உள்ளிட்ட 7 வகை RE-களுக்காக தனித்தனியாக இவ்வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது, ஒழுங்குமுறை தெளிவை அதிகரித்து, செயல்முறை சுமையை குறைத்து, வணிகம் செய்வதில் எளிமையை மேம்படுத்தும் RBI-யின் மிகப்பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.
244 புதிய மாஸ்டர் வழிகாட்டுதல்கள்:
பங்குதாரர்களுடன் ஆலோசித்து, RBI மொத்தம் 244 மாஸ்டர் டைரெக்ஷன்களை வெளியிட்டுள்ளது. 11 விதமான RE-களுக்கான வழிகாட்டுதல்கள் ‘as-is’ அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன

புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ள 7 RE-கள்:
- வர்த்தக வங்கிகள்
- சிறு நிதி வங்கிகள்
- செலுத்தும் வங்கிகள் (Payments Banks)
- உள்ளூர் பகுதி வங்கிகள்
- பிராந்திய கிராம வங்கிகள்
- நகர கூட்டுறவு வங்கிகள்
- கிராம கூட்டுறவு வங்கிகள்
புதிய வழிமுறைகள் என்னென்ன?
- அனைத்து டிஜிட்டல் வங்கி சேனல்களுக்கும் விரிவான கொள்கைகள் அமைக்க RE-களுக்கு கட்டாயம்
- சேவைகள் வழங்குவதற்கான தகுதி, தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள், இணக்கப்பாட்டு விதிகள்
- வாடிக்கையாளர் நடைமுறைகள், விலக்குகள் உள்ளிட்டவை
- இன்டர்நெட் வங்கி, மொபைல் வங்கி உள்ளிட்ட வாடிக்கையாளர் சாதனங்களின் மூலம் இயங்கும் அனைத்து டிஜிட்டல் சேனல்களும் இதில் அடங்கும்.
டிராஃப்ட் வழிமுறைகளிலிருந்து முக்கிய மாற்றங்கள்
வங்கிகள் டிஜிட்டல் தளங்களில் மூன்றாம் தரப்பு தயாரிப்புகளை காட்டக் கூடாது என்ற முன்முயற்சி மாற்றப்பட்டது
இனி வாடிக்கையாளர் லாகின் செய்த பிறகு மட்டும் அனுமதிக்கப்பட்ட தயாரிப்புகள் — காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட், அரசுத் திட்டங்கள் உள்ளிட்டவை — காட்டலாம்
லாகின் செய்யும் முன் இடைமுகங்களில் விளம்பரங்கள் மிகக் குறைவாக இருக்கும்
புதிய டிஜிட்டல் சேனல் அறிமுகப்படுத்த ஒவ்வொரு முறையும் RBI அனுமதி பெற வேண்டிய அவசியம் நீக்கப்பட்டது.
இந்த மாற்றம், வங்கிகள் புதிய ஆப், இண்டர்ஃபேஸ் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் வடிவமைப்புகளை வேகமாக அறிமுகப்படுத்த உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் வாடிக்கையாளர் அனுபவமும் விரைவாக மாறக்கூடும்.
(PTI தகவல்களுடன்)