+

நடிகர் அஜித் குமார் ரேசிங் அணியுடன் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டணி!

கார் பந்தைய உலகில் சீறிப்பாய்ந்து வரும் முன்னணி திரை நட்சத்திரம் அஜித் குமார் ரேஸிங் குழுவுடன், ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம் கூட்டணியை அறிவித்துள்ளது.

கார் பந்தைய உலகில் சீறிப்பாய்ந்து வரும் முன்னணி திரை நட்சத்திரம் 'அஜித் குமாரின் ரேஸிங் குழு'வுடன் (Ajith kumar Racing), ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம் கூட்டணியை அறிவித்துள்ளது. அஜித் ரேஸிங் அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக கேம்பா எனர்ஜி விளங்கும், என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி திரை நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமார், கார் பந்தைய பிரியர் என்பதும், உலகின் பல்வேறு கார் பந்தயங்களில் பங்கேற்று வருவதும் நன்கறியப்பட்டதே. இதனிடையே, அஜித் குமார் ரேஸிங் அணியையும் துவங்கி சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

ajith

இந்நிலையில், அஜித் ரேஸிங் குழுவுடன் இணைந்து செயல்பட இருப்பதை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் நுகர்வோர் பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் (ஆர்சிபிஎல்) அஜித் குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக கேம்பா எனர்ஜி குளிர்பானத்தை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேட் இன் இந்தியா முயற்சிகளில் ஆதரிப்பது நிறுவன கொள்கைகளில் முக்கியமாக இருப்பதாகவும், சர்வதேச மேடைகளில் இந்திய திறமையை ஆதரிப்பதை முக்கியமாக கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேம்பா எனர்ஜி மற்றும் அஜித்குமார் ரேஸிங் ஆகிய இரண்டு பிராண்டுகளும் கொண்டுள்ள ஆதார குணங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த கூட்டணி அமைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எளிதில் முயற்சியை கைவிடாத இக்கால இளைஞர்கள் அணுகுமுறையை பிரதிபலிக்கும் கேம்பா எனர்ஜி, சர்வதேச போட்டி அரங்கில் அஜித் ரேஸிங் குழுவுக்கு ஊக்கம் அளிக்கும், என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய எண்டியூரன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் அணி மூன்றாவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த அணிக்கு ரிலையன்ஸ் நுகர்வோர் நிறுவனம் ஆதரவு அளித்திருப்பது கார் பந்தைய உலகில் முன்னிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.


Edited by Induja Raghunathan

More News :
facebook twitter