ரோனி ஸ்க்ரூவாலா தலைமையிலான UpGrad, பைஜூஸின் மேலாண்மை நிறுவனம் திங்க் & லேர்ன் பிரைவேட் லிமிடெட் (TLPL) மீது நடைபெற்று வரும் திவால் தீர்வு செயல்முறையில் பங்கேற்க தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
“TLPL–இன் தீர்வு மற்றும் லிக்விடேஷன் செயல்முறைக்காக, அதன் அனைத்து சொத்துகளுக்கும் இணையான EOI (Expression of Interest) தாக்கல் செய்துள்ளோம். இதற்கு அப்பால், ரகசிய ஒப்பந்தத்தால் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது,” என்று ஸ்க்ரூவாலா YourStory-க்கு தெரிவித்தார். இந்த தகவலை முதலில் The Economic Times வெளியிட்டது.
பின்னர் வெளியிட்ட விளக்கத்தில்,
“BYJU’S–ன் மேலாண்மை நிறுவனத்தின் சொத்துகள் குறித்து மேலும் அறிந்து மதிப்பிடுவதற்காகவே இந்த EOI தாக்கல். இதில் சில சொத்துகள் உரிமை தொடர்பான சட்ட சிக்கல்களில் இருந்ததாகவும், தற்போது கடன் வழங்குநர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் புரிகிறது. EY நியமிக்கப்பட்டிருப்பதால், தகுந்த நடைமுறைகளை பின்பற்றுவோம்,” என்று அவர் கூறினார்.
அப்க்ராட், K-12 துறையில் இல்லை என்றும், அந்தத் துறையில் ஆர்வமும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். TLPL–இல் உயர் கல்வி மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு துறைக்கு உட்பட்ட சொத்துகள்தான் தங்களை ஈர்க்கின்றன என்றும் குறிப்பிடினார். இவற்றில் சில சொத்துகள் முறையான செயல்முறை இல்லாமல் விலகியிருக்கலாம் என்றும், அவை மீளாய்வு செய்யப்படும், என நம்பிக்கை தெரிவித்தார்.
ஸ்க்ரூவாலா குறிப்பிட்ட சொத்து, BYJU’S 2021–ல் $600 மில்லியனுக்கு கைப்பற்றிய கிரேட் லெர்னிங் (Great Learning) ஆக இருக்கலாம். BYJU’S நிதி சரிவுக்குப் பிறகு, நிறுவன பங்குகள் கடன் கொடுத்தவர்களுக்குச் சென்றதால், அதன் நிறுவுநர்கள் மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற்றனர். தற்போது அவர்கள் கடன்களை அடைத்து, சிக்கலற்ற நிர்வாகத்திற்கான வழியை அமைக்க முயற்சிக்கின்றனர்.
TLPL–இல் EOI தாக்கல் செய்யும் கடைசி தேதி நவம்பர் 13–இலிருந்து டிசம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் பை தலைமையிலான மனிப்பால் எஜுகேஷன் & மெடிக்கல் குழுமமும் TLPL–க்கு EOI தாக்கல் செய்துள்ளது. அவர்கள் முக்கியமாக, தாங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள Aakash Educational Services (AESL)–ஐ ஒருங்கிணைக்க விரும்புகின்றனர்.
இதே நேரத்தில், அப்க்ராட்; Unacademy–யை $300–400 மில்லியன் மதிப்பீட்டில் வாங்குவதற்கும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இது பைஜூஸ் சொத்துக்களைப் போலவே அப்க்ராட் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும்.
Unacademy உடனான இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் டெஸ்ட்-பிரெப் துறையில் வலுவான நிலை; பெரும்பான்மை கற்றல் பயனர்கள்; கூடுதல் இன்டெலெக்சுவல் ப்ராப்பர்டி; மற்றும் சுமார் $100 மில்லியன் கூடுதல் வருவாய், என பல நன்மைகள் கிடைக்கும். இந்த ஒப்பந்தம் முழுவதும் ஷேர் ஸ்வாப் மூலம் நடைபெறும்; அப்க்ராட் பணம் செலவிட வேண்டியதில்லை.
2024–ல் Temasek–இல் இருந்து $2.25 பில்லியன் மதிப்பீட்டில் முதலீடு பெற்ற அப்க்ராட், FY25–இல் 1,943 கோடி வருவாயுடன் பாசிட்டிவ் EBITDA பெற்றதாக தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.