இந்தியாவில் தொழில்முறை சி.இ.ஓ.,க்களுக்கான சராசரி ஊதியம் (இழப்பீடு) கடந்த ஆண்டைவிட 13 சதவீதம் அதிகரித்து ரூ.10 கோடியாக இருப்பதாக இந்திய வர்த்தக அதிகாரிகள் செயல்பாடு மற்றும் பலன்கள் தொடர்பான டிலாய்டு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த இழப்பீட்டில் 40 சதவீதம் மட்டுமே நிலையானது, எஞ்சிய 60 சதவீதம் இடர் கொண்டது. குறுகிய கால பலன்கள் அல்லது ஆண்டு போனஸ், சி.இ.ஓ., இழப்பீட்டின் 25 சதவீதமாகும். நீண்ட கால ஊக்கத்தொகை 35 சதவீதம் ஆகும்.
சி.ஓ.ஓ,. சி.எப்.ஓ., சி.எச்.ஆர்.ஓ., சி.எம்.ஓ. மற்றும் சி.எம்.ஓ., உள்ளிட்ட இதர தலைமை அதிகாரிகளுக்கான (சி.எக்ஸ்.ஓ.) ஊதியம் கடந்த ஆண்டு 7 முதல் 11 சதவீதம் உயர்ந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.
சி.எக்ஸ்.ஓ., ஊதியத்தில் 60 சதவீதம் நிலையானது. எஞ்சிய தொகை நீண்ட மற்றும் குறுகிய கால பலன் சார்ந்தது. சி.இ.ஓவுக்கு அடுத்தபடியாக, சி.ஓ.ஓ மற்றும் சிஎப்.ஓக்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர். இவர்களுக்கான மொத்த இழப்பீடு ரூ. 4 கோடியாக அமைகிறது.
இந்திய வர்த்தக அதிகாரிகள் செயல்பாடு மற்றும் பலன்கள் தொடர்பான டெலாய்டு ஆய்வின் ஆறாவது பதிப்பு, 2024 செப்டம்பரில் இந்தியா சார்ந்த பி2பி சர்வே மூலம் துவங்கியது. இந்த ஆய்வில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும் என டெலாய்ட் இந்தியா தெரிவித்துள்ளது.
"இந்தியாவில் திறமையாளர்கள் தொடர்பான வரம்பு மற்றும் அதிக தேவை காரணமாக, தலைமை அதிகாரிகள் ஊதியம் தொடர்ந்து அதிகரிக்கிறது. தற்போது பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு தலைமை அதிகாரிகள் ஊதியத்தில் பிரதிபலிக்கவில்லை,” என டெலாய்ட் இந்தியா பங்குதாரர் அனண்டோர்ப் கோஸ் கூறியுள்ளார்.
இரண்டுக்கும் தொடர்புள்ளதால் அடுத்த ஆண்டு இதன் பிரதிபலிப்பு இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
"சி.இ.ஓ., தவிர, மற்ற செயல்பாடுகளை விட மொத்த இழப்பீடு பின் தங்கியிருக்கக் கூடிய சட்ட, இடர் மற்றும் விதிமுறைகள் சார்ந்தவற்றில் இழப்பீட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருப்பதாகவும்,” அவர் மேலும் கூறினார்.
தலைமை அதிகாரிகள் அளவில், குறுகிய கால பலன்களில், வெறும் நிதி அம்சங்கள் கடந்து ஒட்டு மொத்த நோக்கில் அல்லது வர்த்தக நோக்கில் மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
இருப்பினும், நீண்ட கால பலன்கள் நிதி செயல்பாடுகள் சார்ந்தே அமைகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் தலைமை அதிகாரிகள் செயல்பாட்டை மதிப்பிட நிதி மற்றும் வியூக முன்னுரிமைகள் கொண்ட ஸ்கோர்கார்டு முறையை பின்பற்றுகின்றன.
வியூக நோக்கிலான இலக்குகள் தொடர்பான முன்னேற்றத்தை உறுதி செய்ய, ஆண்டு போனஸ் உள்ளிட்டவற்றை தீர்மானிக்கும் போது செயல்பாடுகள் சார்ந்த காரணிகளில் கவனம் செலுத்துகின்றன. மேலும், இலக்குகளை தவறவிட்டதற்காக தலைமை அதிகாரிகளுக்கு நிறுவனங்கள் குறைந்த போனஸ் வழங்கும் நிலையில் உள்ளது.
நிறுவனங்கள் பங்குகள் சார்ந்த நீண்ட கால ஊக்கத்தொகையை அளிக்கத் துவங்கி இருப்பதோடு, பங்கு பலன்கள் மற்றும் நிறுவனங்களுக்கான செலவுகள் சார்ந்த ஊதியம் அளவும் அதிகரிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும், முன்பை விட புதிய பங்கு சார்ந்த திட்டங்களுக்கான அனுமதி அதிக ஆய்வுக்கு உள்ளாகின்றன. நிர்வாக திட்டங்களை பிராக்ஸி நிர்வாக நிறுவனங்கள் கேள்விக்குள்ளாக்குவது மற்றும் வாக்களிப்பதில் தாக்கம் செலுத்துவதும் அதிகரித்துள்ளது. பங்குதாரர் நிராகரிப்பும் கடந்த ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
"செயல்பாடு பங்குகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் போன்ற பயன்பாடு அதிகமாவதன் காரணமாக பங்கு அடிப்படையிலான ஊதியம் மிகவும் நுணுக்கமாகியுள்ளது. பங்குதாரர்கள் நலனை காப்பதை உறுதி செய்வதற்காக புதிய திட்டங்கள் நுட்பமாக ஆய்வுக்குள்ளாகப்படுகிறது. நிர்வாக முடிவுகள் மேம்பட இது வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். பங்குதாரர்கள் முன்வைக்கப்படும் திட்டங்களில் தெளிவான முன்னேற்றம் உள்ளது,” என்று டெலாய்ட் இந்தியா இயக்குனர் தினகர் பவன் கூறியுள்ளார்.
தலைமை அதிகாரிகள் பதவி காலம் அளவு குறைந்து, பங்குதாரர்கள் செயல்பாடு அதிகரிக்கும் நிலையில், ஊதியம், பலன்கள், சி.இ.ஓ பேச்சுவார்தையில் அதிக அழுத்தம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி- பி.டி.ஐ
Edited by Induja Raghunathan