
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை கடந்த நிலையில், இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 512.07 புள்ளிகள் சரிந்து 75,869.38 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 153 புள்ளிகள் சரிந்து 23,713.60 ஆக இருந்தது.
“ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் வலுத்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தாண்டிவிட்டது. இதன் தாக்கத்தல் இந்திய பங்குச் சந்தையிலும் பெரும் வீழ்ச்சி நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் ஐடிசி நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டிருந்தது. ஏனைய அனைத்து நிறுவனப் பங்குகளும் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.15 மணியளவில் சென்செக்ஸ் 826.96 புள்ளிகள் சரிந்து 75,564.43 ஆகவும், நிஃப்டி 223.60 புள்ளிகள் சரிந்து 23,646.00 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் பாதகப் போக்கு நிலவுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் வலுத்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தாண்டிவிட்டது. இதன் தாக்கத்தல் இந்திய பங்குச் சந்தையிலும் பெரும் வீழ்ச்சி நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
ஐடிசி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
எடர்னல்
எம் அண்ட் எம்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டெக் மஹிந்திரா
எல் அண்ட் டி
இந்துஸ்தான் யூனிலீவர்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
சன் பார்மா
எஸ்பிஐ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா ஸ்டீல்
இண்டஸ்இண்ட் பேங்க்
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
நெஸ்லே இந்தியா
ஆக்சிஸ் பேங்க்
பாரதி ஏர்டெல்
ஐசிஐசிஐ பேங்க்
என்டிபிசி
டைடன் கம்பெனி
அதானி போர்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
மாருதி சுசுகி
டிசிஎஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இன்போசிஸ்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.57 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan