+

Stock News: அமெரிக்கா Vs சீனா - இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் ரெட் அலர்ட்!

அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி எதிரொலியால், இந்திய பங்குச் சந்தைகளும் சரிந்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை கூட்டியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இப்போது வெளியிட்டுள்ள பொருளாதாரக் கொள்கை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வரியுத்தம் வலுத்துள்ளதன் எதிரொலியால், இந்திய பங்குச் சந்தைகளிலும் மீண்டும் வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக சரிந்து ‘ரெட் அலர்ட்’ சூழல் நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஏப்.9) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 554.02 புள்ளிகள் சரிந்து 73,673.06 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 178.85 புள்ளிகள் சரிந்து 22,357 ஆக இருந்தது.

அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி எதிரொலியால், இந்திய பங்குச் சந்தைகளும் சரிந்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை கூட்டியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இப்போது வெளியிட்டுள்ள பொருளாதாரக் கொள்கை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

இன்று பிற்பகல் 12.40 மணியளவில் சென்செக்ஸ் 279.51 புள்ளிகள் (0.38%) சரிந்து 73,947.57 ஆகவும், நிஃப்டி 95.55 புள்ளிகள் (0.40%) சரிந்து 22,440.30 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்த நிலையில், ஆசிய பங்குச் சந்தைகளான சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் என அனைத்துப் பங்குச் சந்தைகளும் மீண்டும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இந்தப் போக்கு, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.

sensex

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் தொடங்கி வைத்த வரிவிதிப்பு போரின் தாக்கமும், உலகப் பொருளாதார மந்தநிலை அச்சமும் வலுவடைந்துள்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில் அமெரிக்கா - சீனா இடையிலான பொருளாதாரக் கொள்கை யுத்தம் வலுத்துள்ளதும் பங்குச் சந்தைகளின் சரிவுக்கு முக்கிய காரணம். இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளும் தாக்கம் ஏற்படுத்தலாம் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏற்றம் காணும் பங்குகள்:

நெஸ்லே இந்தியா

இந்துஸ்தான் யூனிலீவர்

பவர் கிரிட் காப்பரேஷன்

டைட்டன் கம்பெனி

எம் அண்ட் எம்

ஐடிசி

ஏசிய பெயின்ட்ஸ்

அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்

கோடக் மஹிந்திரா பேங்க்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மாருதி சுசுகி

இறங்கு முகம் காணும் பங்குகள்:

டாடா மோட்டார்ஸ்

பாரதி ஏர்டெல்

பஜாஜ் ஃபின்சர்வ்

ஐசிஐசிஐ பேங்க்

என்டிபிசி

ஹெச்டிஎஃப்சி பேங்க்

சன் பார்மா

டிசிஎஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஆக்சிஸ் பேங்க்

எல் அண்ட் டி

எஸ்பிஐ

பஜாஜ் ஃபைனான்ஸ்

டாடா ஸ்டீல்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 பைசா குறைந்து ரூ.86.56 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter