முன்னணி சர்வதேச நிறுவனங்களுக்காக உலகளாவிய திறன் மையங்களை (GCC) அமைப்பதில் முன்னிலை வகிக்கும் ஏ.என்.எஸ்.ஆர் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவில் வலுவான தொழில்முனைவு சூழல் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு கருதப்படும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி சக்திகளில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்வதாக டெலாய்ட் எம்.எஸ்.எம்.இ. சூழல் அட்டவனை 2025 தெரிவிக்கிறது. உற்பத்தி மற்றும் சேவை பிரிவில் உள்ள ஆற்றல், ஜிசிசிகள் உள்ளிட்ட சர்வதேச செயல்பாடுகளுக்கு மாநிலம் ஏற்றதாக இருப்பதை உறுதி செய்கின்றன.
இந்நிலையில், தற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்நுட்பம், புதுமையாக்கம் மற்றும் அதிக மதிப்புள்ள சர்வதேச சேவைகளுக்கு ஈர்ப்பு மிக்க மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை வலுவாக்கும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் பிரத்யேக ஜிசிசி கொள்கை, இணையில்லாத வேலைவாய்ப்பு தன்மை, வேகமாக வளரும் தொழில்நுட்ப திறமையாளர்கள் பரப்பு ஆகியவற்றை சாதகமாக கொண்டு, ஏ.என்.எஸ்.ஆர் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க அளவிலான முதலீடுகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், 10,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் இது தொடர்பான தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
"இந்த கூட்டு மூல, ஏஎன்.எஸ்.ஆர் அடுத்த அலை உலக நிறுவனங்களை கொண்டு வரும். அவற்றுக்கு கொள்கை ஆதரவு, வேகமான அனுமதி, இடம் தேர்வு மூலம் ஆதரவு அளிப்போம்,” என்று மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
"உலகின் ஈர்ப்பு மிகு ஜிசிசி இடமாக தமிழ்நாடு இருக்க வேண்டும், என விரும்புகிறோம். ஏற்கனவே இந்த போக்கை உணரலாம். தொழில்நுட்பம், ஆட்டோ, வங்கி, நிதிச்சேவை, ஏரோஸ்பேஸ், பொறியியல், ரீடைல் நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளன. நம்முடைய திறமை, உள்கட்டமப்பு, நிலையான அரசு ஆகியவையே இதற்கான காரணம்,” என்று அந்த செய்திக்குறிப்பில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கைடன்ஸ் தமிழ்நாடும் நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஓ..டாக்டர்.டாரேஸ் அகமது, ஏ.என்.எஸ்.ஆர் நிறுவனர், சி.இ.ஓ. லலீத் அகுஜாவுடன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையைல் ஒப்பந்த ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர்.
ஏ.என்.எஸ்.ஆர் நிறுவனம் 200 ஜிசிசி-களை அமைத்துள்ளது. இதில், 21 ஆண்டு செயல்முறை அனுபவம் கொண்டுள்ளது. ஏஐ பொறியியல், சைபர் பாதுகாப்பு, சேவை உருவாக்கம், டிஜிட்டல் வணிகம், ஆய்வு உள்ளிட்ட துறைகளில் அனுபவம் கொண்டுள்ளது.
"திறமையாளர்கள், உலகத்தரமான உள்கட்டமைப்பு, முற்போக்கான நிர்வாகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு உலக அளவில் போட்டி மிக்க ஜிசிசி இடமாக அமையும்,” என ஏ.என்.எஸ்.ஆர் நிறுவனர், சி.இ.ஓ. லலீத் அகுஜா கூறியுள்ளார்.
மாநிலத்திற்கு அடுத்த தலைமுறை சர்வதேச நிறுவனங்களை கொண்டு வருவதில் உற்சாகம் கொள்கிறோம், என்றும் கூறியுள்ளார்.
தொகுப்பு: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan