ஏஐ தரவு மையம் அமைக்க TPG இடமிருந்து 1 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது TCS

12:08 PM Nov 22, 2025 | cyber simman

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தனது ஏஐ தரவு மைய வர்த்தகம் ஹைபர் வால்டிற்காக சர்வதேச தனியார் சமபங்கு நிறுவனம் டிபிஜியிடம் இருந்து ஒரு பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

More News :

ஹைபர்வால்ட், டிசிஎஸ் மற்றும் TPG-யின் சமபங்கு மற்றும் கடனை கலவையாக கொண்டிருக்கும். அடுத்த சில ஆண்டுகளில் இரண்டு பங்குதாரர்களும் கூட்டாக ரூ.18,000 கோடி வரை முதலீடு செய்வார்கள். இதில், டிபிஜி ரூ.8,820 கோடி முதலீடு செய்யும்.

டிசிஎஸ் ஹைபர்வால்ட் ஏஐ தயார் நிலை கொண்ட உள்கட்டமைப்பாக விளங்கும். குறிப்பிட்ட நோக்கத்திற்கான, திரவ குளிரூட்டல் தரவு மையங்களை கொண்டிருக்கும். அதிக ரேக் அடர்த்தி, எரிசக்தி செயல்திறன் மற்றும் முக்கிய கிளவுட் பகுதிக்கான வலைப்பின்னல் தொடர்பை கொண்டிருக்கும்.

இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு முழுமையான ஏஐ சேவைகளை வழங்கும் தனித்துவமான நிலையில் டிசிஎஸ் உள்ளது. தொழில்துறைக்கான உலகத்தரம் வாய்ந்த ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தீர்வுகளை உருவாக்குவதில் முன்னிலை வகிப்பதில், நிறுவனத்தை ஏஐ சார்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக உருவாக்குவதில் உற்சாகம் கொள்கிறோம்,” என்று டிசிஎஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

ஏஐ சேவைகளை சிறப்பாக வழங்க, ஏஐ உள்கட்டமைப்பு வசதியை ஏற்ற முறையில் வடிவமைத்து, செயல்படுத்த அதிக வளர்ச்சியை நாடுபவர்கள் (hyperscalers) மற்றும் ஏஐ நிறுவனங்களுடன் டிசிஎஸ் நெருக்கமாக இணைந்து செயல்படும். அடுத்த சில ஆண்டுகளில், ஜிகாபாட்டும் அதிக திறன் கொண்ட ஏஐ தயார் நிலை தரவு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

“பசுமை எரிசக்தி உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் சந்திக்கும் புள்ளியில் அமையும் பலவித பரிமானம் கொண்ட சொத்து வகையாக தரவு மையங்கள் அமைகின்றன. இந்த பரப்பில் டிபிஜி-இன் அனுபவத்தை கொண்டு வந்து, டிசிஎஸ் உடன் இணைந்து செயல்பட்டு, இந்தியாவின் அடுத்த அலை டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதியை இயக்குவதை எதிர்நோக்குகிறோம். இதை காலநிலை மாற்ற தன்மைக்கு நேர்நிறையாக, டிஜிட்டல், தரவு பொருளாதாரத்திற்கான மேலும் உறுதியாக எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறோம்,” என டிபிஜி செயல் தலைவர் ஜிம் கட்லர் (Jim Coulter) கூறினார்.

ஏஐ தேவை அதிகரிக்கும் நிலையில் ஏஐ நிறுவனங்கள், அதி வளர்ச்சியை நாடும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ஏஐ தரவு மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும், என டிசிஎஸ் கருதுகிறது. கம்ப்யூட்டர் வன்பொருளுக்கு, அதிக வேக சேமிப்பிற்கு, குறைந்த தாமத சேவைக்கு, பெரிய அளவிலான ஏஐ மாதிரிகளுக்கு இவை அவசியம்.

இந்தியா தற்போது 1.5 GW தரவு மையங்கள் கொண்டுள்ளது. 2030ல் 10 GW ஆகும், என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 முதல் இந்தியா இப்பிரிவில் 94 பில்லியன் டாலர் முதலீடு ஈர்த்துள்ளது.

ஆங்கிலத்தில்: திம்மையா புஜாரி, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan