+

Tech30: இந்தியாவின் அடுத்த புதுமையாக்க அலையை வடிவமைக்கும் 30 ஸ்டார்ட் அப்கள்!

ஆழ் நுட்ப முன்னேற்றம், ஏஐ சார்ந்த தூய்மை நுட்பம், சுகாதார புரட்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் செயல்படும் இந்த ஸ்டார்ட் அப்கள் இந்தியாவின் அடுத்த பத்தாண்டு வளர்ச்சியை வடிவமைத்து வருகின்றன.

இந்திய ஸ்டார்ட் அப் கதை அடுத்த கட்டத்தில் நுழைந்துள்ளது. நிதி திரட்டும் சிக்கல் மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொண்ட பிறகு, புதிய தலைமுறையைச் சேர்ந்த நிறுவனர்கள் உறுதி, நீடித்த தன்மை மற்றும் வளர்ச்சி தன்மைக்கு ஏற்ற நிறுவனங்களை உருவாக்கி வருகின்றனர். இவர்கள் மதிப்பீடுகளை மட்டும் துரத்திச் செல்லவில்லை. எரிசக்தி, உயிரி நுட்பம், ரோபோடிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் பிரச்சனைக்கு தீர்வு காண்கின்றனர். பெரும்பாலும், சர்வதேச தரத்திற்கு நிகரான உள்ளூர் நுட்பத்தின் துணையோடு செயல்படுகின்றனர்.

பல்வேறு துறைகளில் தொழில்முனைவோரை அடையாளம் கட்டி, முன்னிறுத்துவதில் யுவர்ஸ்டோரி முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில், டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில், டெக் 30 பட்டியலின் வாயிலாக இவர்கள் கதையை சுட்டிக்காட்டுகிறோம். பல்வேறு துறைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தியாவின் மிகவும் பிரகாசமான 30 ஸ்டார்ட் அப்'களாக இந்த பட்டியல் அமைகிறது.

ஸ்டார்ட் அப் சூழல் முன்னோடிகள், யுவர்ஸ்டோரி ஆசிரியர் குழு மூத்த உறுப்பினர்கள், ஆய்வு பணியாளர்கள் கொண்ட நடுவர் குழுவால், 2,000 விண்ணப்பங்களில் இந்த ஆண்டு ஸ்டார்ட் அப்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த டெக் 30 பட்டியல் இந்தியாவின் மிகவும் செல்வாக்கான தொழில்நுட்ப மாநாடு TechSparks -2025 முதல் நாளில் வெளியிடப்பட்டது.

தூய எரிசக்தி நிர்வாகம், வாயு மண்டல நீர் உருவாக்கம் முதல் விண்வெளி கழிவு நீக்கம் மற்றும் ஏஐ சார்ந்த நியூராலஜி வரை, இந்த ஸ்டார்ட் அப்கள் குறிக்கோள் கொண்ட புதுமையாக்கத்தை பிரதிபலிக்கின்றன. இவை ஒவ்வொன்றும் துறைசார்ந்த இடைவெளிகளை எதிர்கொள்வதோடு, பழைய அமைப்புகளை மறுசிந்தனை செய்து, வாழ்க்கையை திறன் மிக்கதாக, பாதுகாப்பானதாக, நீடித்த தன்மை கொண்டதாக மாற்றும் நோக்கம் கொண்ட தொழில்நுட்பத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளன.

இந்தியாவின் ஆழ்நுட்ப பத்தாண்டுகளை வரையறுக்கும் 30 நிறுவனங்கள் இதோ:

Tech-30

4கிளைமெட் (4Climate)

4 கிளைமெட் (4Climate) ஐஓடி மற்றும் ஏஐ கொண்டு, பருவநிலை, பாசனம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை கட்டுப்படுத்தி பசுமை குடில்கள் மற்றும் உள்வெளி பண்ணைகளை தானியங்கிமயமாக்குகிறது. இதன் மேடை சென்சார் கொண்டு சூழ்நிலையை கண்கானித்து, அதற்கேற்ப தானாக செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இந்தியா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில், வர்த்தக பண்ணைகள், நீடித்த நகர திட்டங்கள் மற்றும் ஓட்டல்கள், ஏர்லைன்ஸ் போன்ற வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கிறது.

அபயம் ஸ்பேஸ்டெக் % டிபென்ஸ் (Abyom SpaceTech and Defence)

அபயம் ஸ்பேஸ்டெக் அண்ட் டிபென்ஸ் ஆர்.எஸ்.ஆர், எஸ்.ஆர்.எல்.வி., எம்.ஆர்.எல்வி., உள்ளிட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுவாகனங்களை தயாரிக்கிறது. மேலும், ராக்கெட் குழு, கல்வி நிறுவனங்கள், பேராசியரியர்கள், ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்'களுக்கான திறந்த வெளி சோதனை வசதியை அளிக்கிறது.

ஏரோனேரோ சொல்யூஷன்ஸ் (Aeronero Solutions)

ஏரோனேரோ சொல்யூஷன்ஸ்  வாயு மண்டல நீர் உற்பத்தி தொழில்நுட்பம் கொண்டு காற்றில் இருந்து தூய குடிநீரை உருவாக்குகிறது. இந்த ஆழ்நுட்ப நிறுவனம் குறைந்த ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் கூட, அடர்த்தியாக்கல் மற்றும் பிரித்தெடுத்தல் நுட்பம் கொண்டு நீரை உற்பத்தி செய்கிறது. இதன் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான மாடுலர் அமைப்பு நாள் ஒன்றுக்கு லிட்டர் ரூ.4 எனும் செலவில் 50,000 லிட்டர் தண்ணீரை உற்பத்தி செய்கிறது, சூரிய மின்சக்தி எனில் இந்த செலவு பூஜ்ஜியம்.

ஆர்டிகுலஸ் சர்ஜிகல் (Articulus Surgical)

ஆர்டிகுலஸ் சர்ஜிகல் பி2பி பரப்பில் செயல்படும் மருத்துவ சாதனங்கள் ஸ்டார்ட் அப். குறைவான ஊடுருவல் கொண்ட செயல்முறைகளுக்கான செலவு குறைந்த சர்ஜிகல் ரோபோ அமைப்பை உருவாக்கி வருகிறது. இதன் முன்னணி சேவையான பல்சர், சர்ஜன்கள் தொலைவில் இருந்து துல்லியமாக, அயல் அமைப்புகளின் செலவில் ஒரு பகுதியில் செயல்பட வழி செய்கிறது. மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை மையமாக கொண்டது.

போல்னா ஏஐ (Bolna AI)

போல்னா ஏஐ, மனிதர்கள் போன்ற குரல்வழி ஏஜென்ட்களை உருவாக்குவதற்கான குரல்வழி தானியங்கி கருவிகளை உருவாக்க வர்த்தக நிறுவனங்களுக்கு உதவுகிறது. பேச்சில் இருந்து எழுத்து, மொழி மற்றும் எழுத்தில் இருந்து பேச்சு மாதிரிகள் கொண்டு சீரான, பல மொழி உரையாடல்களை வேலை நியமனம், வாடிக்கையாளர் சேவை மற்றும் லாஜிஸ்டிக்சில் சேவை அளிக்கிறது.

ப்ரீத்தர் எச்.கியூ (Breethr HQ)

ப்ரீத்தர் எச்.கியூ , வெப்பமாக்கல், குளிரூட்டுதல், ஈரப்பதம் கட்டுப்பாடு, காற்றோட்டம், காற்று வடிகட்டல் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் அனைத்தும் அடங்கிய காற்று நிர்வாக அமைப்பை உருவாக்கியுள்ளது. 99.9 சதவீத செயல்திறன் கொண்ட மருத்துவ தரத்திலான HEPA பில்டர்கள் மூலம், இந்த அமைப்பு உள்வெளியில் ஒற்றை இலக்க காற்று தர அட்டவணையை பராமரிக்கிறது. பாரம்பரிய அமைப்புகளைவிட குறைந்த எரிசக்தி பயன்படுத்துகிறது.

புல்வொர்க் மொபிலிட்டி (Bullwork Mobility)

புல்வொர்க் மொபிலிட்டி விவசாயம், கட்டுமானம் மற்றும் வேர்ஹவுசிங்கிற்கான தானியங்கி மின் வாகனங்களை வழங்கி வருகிறது. இந்த தூய்மை நுட்ப ஸ்டார்ட் அப், ஸ்பிரேயர், மினி டிராக்டர், டிராக்டர் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. ஏஐ மற்றும் இயந்திர கற்றல் அமைப்புகள் திறன் மூலம் இயங்கும் இவை, துல்லிய பயிரிடல், செயல்கள் தானியங்கிமயம், பயிர் கணிப்பு உள்ளிட்டவற்றை அளிக்கின்றது.

கண்டினியூ (Contineu)

கண்டினியூ . ஏஐ, ஏஐ மற்றும் கம்ப்யூட்டர் பார்வை கொண்டு கட்டுமான இடங்களை கண்காணிப்பதை தானியங்கிமயமாக்குகிறது. காந்தம் மீதான காமிரா மற்றும் காட்சி அலசல் கொண்டு கோளாறுகளை கண்டறிந்து, முன்னேற்றத்தை கண்காணித்து, தரக்கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது.

காஸ்மோசர்வ் ஸ்பேஸ் (Cosmoserve Space)

காஸ்மோசர்வ் ஸ்பேஸ் விண்வெளி குப்பைகளை நீக்கும் மற்றும் புவிவட்டப்பாதையை பாதுகாப்பாக மாற்றும் தானியங்கி ரோபோ விண்கலம் அளிக்கும் ஆழ்நுட்ப நிறுவனம். ஆயுள் முடிந்த செயற்கைகோள்கள், விண்வெளி மிச்சங்கள் நீக்கத்தில் கவனம் செலுத்துகிறது. காலாவதியான செயற்கைகோள்களை ரோபோ கரங்கள் கொண்டு வட்டப்பாதையில் இருந்து நீக்குகிறது.

எட்ஜபில் ஏஐ (Edgeble AI)

எட்ஜபில் ஏஐ தானாக கற்கும் விளிம்பு சார்ந்த ஏஐ மேடைகளை உருவாக்குகிறது. கிளவுட் சேவை இல்லாமல் சாதனங்கள் செயல்பட மற்றும் சுயமாக திருத்திக்கொள்ள வழி செய்கிறது. ரிமோட் சர்வர்களை சாராமல், ஆலை அமைப்புகள், காமிராக்கள், தொழில் அமைப்புகள் நிகழ் நேரத்தில் துல்லியத்தை தக்க வைக்க உதவுகிறது.

இவர்ஸ் ஏஐ (eVerse AI)

இவர்ஸ் ஏஐ, சிறிய அளவிலான பால் பண்ணைகளுக்கு தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்குகிறது. இதன் இணைக்கப்பட்ட பசு சேவை (Connected Cow) கருவுரும் தன்மை மேம்பாடு, பால் அளவு, சுகாதார கண்காணிப்பை வழங்குகிறது. இதே போல கிரீன் கவ், மீத்தேன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துகிறது.

ஜென்லூப் (Genloop)

ஜென்லூப், வர்த்தக அளவிலான ஏஐ சேவைகளை வழங்குகிறது. இவை வர்த்தகங்கள், நன்கு அமைக்கப்பட்ட தரவுகளை இயற்கை மொழி கோரிக்கைகள் மூலம் வர்த்தகங்கள் அணுக வழி செய்கின்றன. இதன் பிரத்யேகமான மொழி மாதிரி, தொடர்ச்சியாக குறிப்பிட்ட வர்த்தக நிறுவனங்களுக்காக பயிற்சி அளிக்கப்பட்டு, உறுதியான, துல்லியமான வர்த்தக உள்ளொளியை அளிக்கிறது.

ஹானு ஏஐ (HanuAI)

ஹானு ஏஐ, சாலை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நிர்வாகத்திற்கான ஏஐ திறன் கொண்ட மென்பொருள் வழங்கும் பி2பி மற்றும் பி2ஜி ஆழ் நுட்ப ஸ்டார்ட் அப். ஏஐ மாதிரிகள், ஜிஐஎஸ் வரைபடம், ஐஓடி சாதனங்கள் கொண்டு இந்த சேவை அரசு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சாலை பராமரிப்பில் உதவுகிறது. இந்தியாவின் 20 மாநிலங்களில் 1,55,000 கிமீ சாலைகளை அளவீடு செய்துள்ளது.

ஹம் ஹெல்த் (Humn Health)

ஹம் ஹெல்த், ரிமோட் போட்டோப்லிதிசிமோகிராபி மற்றும் கம்ப்யூட்டர் பார்வை கொண்டு ஸ்மார்ட் போன்களை தொடர்ச்சியான சுகாதார சென்சாராக மாற்றும் ஏஐ சுகாதார நலன் ஸ்டார்ட் அப். இதன் கணிப்பு மேடை, உடல் நோக்கிலான சிக்னல்களை கவனித்து, தனிப்பட்ட மருத்துவ புரிதலை வழங்குகிறது. ஆரம்ப கட்டத்தில் தாய்மார்கள் சார்ந்த மருத்துவ நிலையில் கவனம் செலுத்துகிறது.

மெட்வோல்ட் ஏஐ (Medvolt AI)

மெட்வோல்ட் ஏஐ, ஜெனரேட்டிவ் ஏஐ, கிராப் ஏஐ, சிமுலேஷன் கொண்டு மருந்து கண்டுபிடிப்பதை வேகமாக்கும் மருந்தக நுட்ப நிறுவனம். இதன் சேவையான மெட்கிராப் விஞ்ஞானிகள், மருந்தக நிறுவனங்கள் புதிய மருந்து மூலக்கூறுகளை மெய்நிகராக வடிவமைத்து, சோதனை செய்து சீராக்க உதவுகிறது.

நியூரோடிஸ்கவரி (NeuroDiscovery AI)

நியூரோடிஸ்கவரி, மின்னணு மருத்துவ பதிவுகள், மருத்துவ இமேஜிங் ஆகியவற்றில் உள்ள தரவுகளை அலசுவதற்கான நியூராலஜி ஏஐ மேடையை உருவாக்குகிறது. மருத்துவர்களுக்கு ஏஐ சார்ந்த உள்ளொளிகளை வழங்குவதோடு, மருந்தக நிறுவனங்கள், அடையாளம் நீக்கப்பட்ட நோயாளிகள் தரவுகளை அணுக வழி செய்கிறது.

ஒபோபோ (Ofofo)

இது ஒரு சைபர் பாதுகாப்பு நிறுவனம். சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் கவனம் செலுத்துகிறது. இதன் கேள்வி பதில் சார்ந்த ஏஜெண்ட் மொழி மாதிரிகள் கொண்டு சைபர் பாதுகாப்பு சார்ந்த கேள்வி பதில்களை தானியங்கிமயமாக்குகிறது. துறைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.

ஓகுலோ ஏரோஸ்பேஸ் (Okulo Aerospace)

ஓகுலோ ஏரோஸ்பேஸ் பாதுகாப்பு மற்றும் நிறுவன தேவைகளுக்கான சூரிய மின்சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானங்களை (UAVs ) வழங்குகிறது. இதற்கான வன்பொருள், மென்பொருளை சொந்தமாக உருவாக்குகிறது. நாட்கள் கணக்கில் அல்லது மாதங்கள் கணக்கில் இயங்கும் ட்ரோன்களை உருவாக்கித்தருவதோடு, கண்காணிப்பு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பிற்கான நிகழ்நேர தரவுகளை அளிக்கிறது.

பவகா எனர்ஜி (Pavakah Energy)

எந்த ஒரு பரப்பையும் சூரிய மின் பேனலாக மாற்றும் மெல்லிய பூச்சை உருவாக்கியுள்ள நிறுவனம். சுவர்கள் அல்லது மேற்கூரை, வாகனங்கள் மீது வர்ணம் போல பூசினால் யூவி மற்றும் ஐஏஐ கதிர்களை தடுத்து, 3-5 டிகிரி குளிரூட்டி, மின்சக்தியையும் உற்பத்தி செய்கிறது.

குவான்ப்ளுயன்ஸ் (Quanfluence Pvt Ltd)

குவான்ப்ளுயன்ஸ், போடோக்ஸ் கொண்டு புதுமையான முறையில் குவாண்டம் கம்ப்யூட்டிங் உருவாக்கும் ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப். குவாண்டம் கம்ப்யூட்டிங் அடிப்படை அலகான குயூபிட்சை 2029 அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பி2பி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

ரெஸ்லிங்க் எனர்ஜி (Reslink Energy)

ரெஸ்லிங்க் எனர்ஜி, இந்தியாவின் மறுசுழற்சி துறைக்கான அறிவார்ந்த எரிசக்தி நிர்வாக அமைப்புகளை உருவாக்கி வருகிறது. ஏஐ மென்பொருளுடன் இணைந்த வன்பொருள் கொண்டு, சூரியமின் சக்தி உருவாக்கம் மற்றும் பாட்டரி செயல்பாடு, உருவாக்கத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்து சீராக்குகிறது.

ரோபோ பயோனிக்ஸ் (Robo Bionics)

ரோபோ பயோனிக்ஸ் முழங்கைக்கு கீழ் பாதிப்பு கொண்டவர்களுக்கான முப்பரிமாண அச்சு கைகளை உருவாக்கித்தருகிறது. இதன் முன்னணி சேவையான கிரிப்பி, தசைகளின் மின் சிக்னல்கள் கொண்டு ரோபோ இயக்கத்தை கட்டுப்படுத்தி, வடிவமைப்பு மற்றும் அழுத்தத்திற்கு ஏற்ப பொருட்களை கையாள உதவுகிறது.

சார்த்தக் ஏஐ (Sarthhak AI)

சார்த்தக் ஏஐ, அறிவியல் ஆய்வு மற்றும் உற்பத்தி ஆய்வை செயல்திறன் மிக்கதாக்கும் சாஸ் சாதனங்களை ஏஐ திறன் கொண்டு வழங்குகிறது. இதன் குட்சயிண்டிபிக் சேவை, ஆய்வகங்கள் மற்றும் ஆய்வு குழுக்கள் பணி செயல்முறையை டிஜிட்டல்மயமாக்கி, தரவுகளை அலசி, புதுமையாக்கத்தை வேகமாக்க உதவுகிறது.

சாட்லியோ லேப்ஸ் (SatLeo Labs)

சாட்லியோ லேப்ஸ், விண்வெளியில் இருந்து அதிக துல்லியம் கொண்ட நிகழ் நேர தெர்மல் படங்களை வழங்கி சர்வதேச தெர்மல் தரவு இடைவெளியை குறைக்கிறது. இந்ஸ்பேசில் (IN-SPACe) அடைக்காக்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப், குறைந்த நீள்வட்ட பாதையில் இருந்து பல பேண்ட் தெர்மல் படங்களை எடுப்பதற்கான செயற்கைகோள் கூட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இதன் முதல் சோதனை செயற்கைகோள் ஏவுதல் 2026 பிப்ரவரி திட்டமிடப்பட்டுள்ளது.

எஸ்.சி.ஐ.கே.ஐ.கியூ (SCIKIQ)

வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தரவுகளை மேலும் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள உதவும் தரவுகள் அலசல் நிறுவனம். இதன் முன்னணி சேவையான டேட்டா ஹப், மேடையை ஒரு சேவையாக வழங்கும் வகையைச் சேர்ந்தது. தரவுகளை பல இடங்களில் இருந்து ஒருங்கிணைத்து, நிகழ்நேர செயல்பாட்டிற்காக ஒற்றை இடத்தில் வழங்குகிறது.

யூஜிஎக்ஸ் ஏஐ (UGX AI)

யூஜிஎக்ஸ் ஏஐ, ஐஓடி மற்றும் ஏஐ கொண்டு உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது. அதிக தரம் வாய்ந்த இயந்திர மற்றும் தரை தரவுகளை திரட்டி, உற்பத்தி செயல்முறையை மேம்படுத்த வழி செய்கிறது. கூடுதல் மனித அல்லது இயந்திர உழைப்பு தேவையில்லை.

வாணி ஏஐ (Vaani AI)

வர்த்தக நிறுவனங்களுககன விரிவான குரல் வழி உள்கட்டமைப்பு மேடையை வாணி ஏஐ உருவாக்குகிறது. இதன் சொந்த பேச்சு- எழுத்து மாற்ற மாதிரி, ஏஐ திறன் கொண்டு இயங்குகிறது. பல்வேறு துறைகளில் மனிதர்கள் போன்ற குரல்வழி பயன்பாட்டை வழங்குகிறது.

விஜினோமிக்ஸ் (Vgenomics)

விஜினோமிக்ஸ் அரிய மரபணு நோய்களை கண்டறிந்து குணமாக்க உதவும் உயிரி நுட்ப ஸ்டார்ட் அப். இதன் மேடைRgenX,  நோயாளி அறிகுறிகளை கண்காணித்து, மரபணு பிறழ்வுகளை கண்டறிய ஆய்வகங்கள், மருந்தக நிறுவனங்களுக்கு உதவுகிறது.

விஸர் ஏஐ (Wizr AI)

மொழி மாதிரிகள் கொண்டு ஏஜெண்ட்களை பாதுகாப்பாக உருவாக்கி செயல்படுத்த நிறுவனங்களுக்கு உதவும் நிறுவனம்ம். நோ கோடு அல்லது குறைந்த கோடு மேடையை உருவாக்கி த்தருகிறது. இதன் எளிமையான பயன்பாடு, வாடிக்கையாளர் சேவை, ஆவணமாக்கல் போன்றவற்றில் உதவுகிறது.

யோ லேர்ன் ஏஐ (YoLearn AI)

தனிப்பட்ட கற்றலை யோலேர்ன் ஏஐ வழங்குகிறது. இதன் ஏஐ பாட்கள், மனித பயிற்சிக்கு நிகரான படிப்படியான வழிகாட்டுதலை வழங்குகிறது. ஆசிரியர்கள் தொடர் செயல்பாடுகளை தானியங்கிமயமாக்கும் சேவையை அளிக்கிறது. மாணவர்களுக்கு உதவும் கோ டீச்சர் வடிவங்களை உருவாக்குகிறது.

டெக் 30 முழு பட்டியலை இங்கு அணுகவும்.

யுச்வர்ஸ்டோரி குழு


Edited by Induja Raghunathan

More News :
facebook twitter