+

கோவையில் ‘TN Rising’ மாநாடு: ரூ.43,844 கோடி முதலீட்டில் 158 ஒப்பந்தங்கள் - 1 லட்சத்திற்கும் மேல் வேலை வாய்ப்புகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 43,844 கோடி ரூபாய் முதலீட்டுடன் 1,00,709 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முக்கிய முதலீடுகள் தொழில் மற்றும் முதலீட்டு ஊக்கு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 43,844 கோடி ரூபாய் முதலீட்டுடன் 1,00,709 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

முக்கிய முதலீடுகள்:

தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை:

  • 42,792 கோடி முதலீடு – 96,207 வேலைவாய்ப்புகள் – 111 ஒப்பந்தங்கள்

குறு, சிறு & நடுத்தர தொழில் துறை:

  • 1,052 கோடி முதலீடு – 4,502 வேலைவாய்ப்புகள் – 47 ஒப்பந்தங்கள்

TN Rising Mou


நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள்:

Yield Engineering Systems (அமெரிக்கா):

  • கோவையில் 150 கோடி முதலீட்டில் 50 புதிய வேலை வாய்ப்புகள்.

Mindox (சிங்கப்பூர்):

  • 398 கோடி முதலீடு – 460 வேலை வாய்ப்புகள்.

Caliber Interconnects (சிங்கப்பூர்):

  • 3,000 கோடி முதலீடு – 4,000 வேலை வாய்ப்புகள்; கோயம்புத்தூரில் குறைக்கடத்தி & மின்னணு உற்பத்தி விரிவாக்கம்.

சக்தி ஏர்கிராஃட் இண்டஸ்ட்ரி (திருப்பூர்):

  • பயிற்சி விமான அசெம்ப்ளி திட்டம்; 500 கோடி முதலீடு – 1,200 வேலை வாய்ப்புகள் (200 நேரடி, 1,000 மறைமுகம்).

திறன்மிகு மையங்களுக்கு அடிக்கல்

ஆவாரம்பாளையம்: உயர்தர பம்புகள் & மோட்டார்களுக்கு 14.43 கோடி மதிப்பிலான திறன்மிகு மையம்.

மூப்பேரிப்பாளையம்: வார்ப்புகள் & உலோக வடிவமைப்பிற்கான 26.50 கோடி மதிப்பிலான திறன்மிகு மையம். இவற்றை டிட்கோ நிறுவனம் செயல்படுத்தும்.

TN Rising cri pumps

ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆராய்ச்சி பூங்கா அறக்கட்டளையின் சார்பில் கோவை மண்டலத்தில் 10 பயன்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கு 2.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்குதல். முதலமைச்சர் இன்று முதல் தவணையாக 78 லட்சம் வழங்கினார்.

ஜவுளித் துறைக்கு புதிய முயற்சி மெசே ஃப்ராங்க்ஃபர்ட் இந்தியா நிறுவனம் 2026 முதல் கோயம்புத்தூரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில்நுட்ப ஜவுளி கண்காட்சி நடத்த முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பணி நியமன ஆணைகள் வழங்கல்

9 நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த முதலீடுகள் பரவலாகப் பயன் அளிக்கவிருக்கின்றன.

More News :
facebook twitter