+

தன்தேராஸ் தாக்கம் - UPI மூலம் டிஜிட்டல் தங்கம் கொள்முதல் 62% ஏற்றம்; ஆன்லைன் சந்தைப் பரிவர்த்தனைகள் சரிவு!

இந்தியர்களின் பண்டிகை சீசன் செலவினங்கள் டிஜிட்டல் தங்க சந்தையில் பெரும் எழுச்சியைக் கண்டுள்ளன. NPCI தரவுகளின்படி, 2025 அக்டோபரில் UPI மூலம் ₹229.04 கோடி மதிப்பிலான டிஜிட்டல் தங்கம் வாங்கப்பட்டுள்ளது — இது கடந்த ஆண்டின் ₹141.02 கோடியை விட 62.4% அதிகம். தன்தேரஸை முன்னிட்டு தங்கம் வாங்கும் பாரம்பரியம

இந்தியர்களின் பண்டிகை சீசன் செலவினங்கள் டிஜிட்டல் தங்க சந்தையில் பெரும் எழுச்சியைக் கண்டுள்ளன. NPCI தரவுகளின்படி, 2025 அக்டோபரில் UPI மூலம் ₹229.04 கோடி மதிப்பிலான டிஜிட்டல் தங்கம் வாங்கப்பட்டுள்ளது — இது கடந்த ஆண்டின் ₹141.02 கோடியை விட 62.4% அதிகம்.

தன்தேராசை முன்னிட்டு தங்கம் வாங்கும் பாரம்பரியம் இந்த உயர்வின் முக்கியக் காரணம். செப்டம்பர் நடுப்பகுதியில் 10 கிராமுக்கு ₹1.12 லட்சம் இருந்த தங்க விலை, தன்தேரஸ் முன் ₹1.35 லட்சம் வரை பாய்ந்தது — ஒரு மாதத்தில் ₹23,000 உயர்வு கண்டது.

இதே நேரம், SEBI டிஜிட்டல் தங்கம் பற்றிய எச்சரிக்கையை வெளியிட்டு, இது ஒழுங்குமுறை வரம்புக்கு வெளியே உள்ளதால் ’அதிக ஆபத்து உள்ள தயாரிப்பு’ எனக் கூறியது. ஆனால், PhonePe, Paytm, Gullak, Jar போன்ற பிளாட்ஃபார்ம்கள் தங்கப் பொருட்களை தீவிரமாக முன்னெடுத்து வருவதால் சந்தை வேகமாக விரிவடைகிறது.

யுபிஐ

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொள்முதல் அக்டோபரில் ₹1,217.59 கோடியாக உயர்ந்து, இது முந்தைய மாதத்தை விட 27% அதிகமாகும். ஸ்மார்ட்போன் மற்றும் வீட்டு உபகரண பிராண்டுகள் வழங்கிய தீபாவளி ஆஃபர்கள் இந்த அதிகரிப்புக்குக் காரணமாகும்.

ஆன்லைன் மார்க்கெட்ப்ளேஸ்: UPI பரிவர்த்தனைகள் 16.9% QoQ வீழ்ச்சி பெற்று ₹835.03 கோடியாக குறைந்தன. ஆனால் ஆண்டிற்கு ஆண்டு (YoY) 27.2% வளர்ச்சி காணப்பட்டது.

புரோக்கிங் & டீலிங்: UPI பரிவர்த்தனைகள் 33.6% QoQ அதிகரித்து ₹6,609.55 கோடியாக உயர்ந்தன. தீபாவளி முகூர்த்த வர்த்தகம் பங்களித்தது. ஆனால் வருடாந்திர அடிப்படையில் 16.3% வீழ்ச்சி உள்ளது.

பரோடா வங்கி அறிக்கையின்படி, இந்த பண்டிகை காலத்தில் UPI பரிவர்த்தனை மதிப்பு ₹17.8 லட்சம் கோடி, கடந்த ஆண்டின் ₹15.1 லட்சம் கோடியை விட குறிப்பிடத்தக்க உயர்வு.

பெரும் அளவிலான நுகர்வோர் செலவினங்களும் தங்கம், எலக்ட்ரானிக்ஸ், முதலீடுகள் போன்ற துறைகளில் தேவை மீட்பும் இந்த சீசனின் முக்கியப் போக்காகத் திகழ்கின்றன.

தமிழில்: முத்துகுமார்

More News :
facebook twitter