அமெரிக்க திவாலா நீதிமன்றம் BYJU’S Alpha வழக்கில் நிதி ஆவணங்களை சமர்ப்பிக்க மறுத்ததை காரணமாகக்கொண்டு, அதன் நிறுவனர் பைஜூ ரவேந்திரன் மீது $1.07 பில்லியன் (சுமார் ₹8,900 கோடி) செலுத்த உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 20 அன்று நீதிபதி பிரெண்டன் லைனஹான் ஷனான் இந்த தீர்ப்பை வழங்கினார். வழக்கில் தொடர்ச்சியான ஒத்துழைப்பு இல்லாமை மற்றும் முன்பே விதிக்கப்பட்டிருந்த தினசரி அபராதத்தை கூட செலுத்தாத நிலை காரணமாக இந்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
குற்றத்திற்கு உதவுதல் மற்றும் குற்றம் செய்யத் தூண்டுதல் ஆகிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டில் $533 மில்லியன் டாலர் தொகையும், மற்றவர் சொத்தை அபகரித்தல் மற்றும் நம்பிக்கைத் துரோகக் குற்றப்பிரிவுகளில் $540.6 மில்லியனும் செலுத்துமாறு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகைகள் 2022 ஆம் ஆண்டில் BYJU’S Alpha-விலிருந்து Camshaft Fund எனும் அமைப்புக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் $533 மில்லியன் 'ஆல்பா நிதி' தொடர்பாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம் முன்பு நியமிக்கப்பட்ட INDEPENDENT DIRECTOR-ன் சாட்சியங்களையும், முன் வழக்குகளில் கிடைத்த ஆதாரங்களையும் கொண்டு கூடுதல் damages hearing இன்றி இத்தொகையை நிர்ணயித்தது. குறிப்பிடத்தக்க வகையில், Camshaft Fund-இல் முதலீடு செய்ததாகக் கூறப்படும் தொகைக்கு BYJU’S Alpha-க்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை, என அந்த சாட்சியம் குறிப்பிடுகிறது.
நீதிபதி தீர்ப்பில்,
“இந்த வழக்கின் சூழல்கள் மிகவும் அபூர்வமாகவும் நான் முன்பு சந்தித்ததிலிருந்து வித்தியாசமாகவும் உள்ளன. ஆகவே இந்த தண்டனை முற்றிலும் நியாயமானது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரவீந்திரன் தன் வாதங்களுக்கு சாதகமாக இருக்கும் போது மட்டுமே அறிக்கைகள் தாக்கல் செய்கிறார், ஆனால் தன்னைப் பாதிக்கக்கூடிய தகவல்கள் தேவையானபோது நீதிமன்ற விசாரணைகளில் ஒத்துழைக்கவில்லை என plaintiffs கூறியதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. என்றார்.
இதனையடுத்து, பைஜு ரவீந்திரன் ஆல்ஃபா ஃபண்ட்ஸ் கணக்குகளை முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு 7 நாட்களில் முன்மொழியப்பட்ட இறுதி தீர்ப்பு ஆணையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது.
இதற்கு முன்பு அவருக்கு விதிக்கப்பட்ட $10,000 தினசரி அபராதமும் செலுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே வாரம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு தனி Delaware அறிக்கையில், OCI Limited நிறுவனத்தின் CEO ஓலிவர் சேப்மன்னின் சத்தியப்பிரமாணத்தின் அடிப்படையில், அந்த நிதி Raveendran-க்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு திருப்பி வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், BYJU’S Founders இதை முழுமையாக மறுத்து, எந்த நிதியும் தனிப்பட்ட பயனுக்காக திருப்பி விடப்படவில்லை என்றும் விரைவில் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
NCLT, NCLAT, உச்சநீதிமன்றம் உள்ளிட்ட தளங்களில் BYJU’S தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நகருகின்றன. பைஜூஸ் இணை நிறுவனரும் பைஜுவின் தம்பியுமான ரிஜு ரவீந்திரனின் புதிய மனுக்கள் lenders-இன் நடவடிக்கைகளையும், நிதி ஒப்பந்தங்களையும் கேள்வி எழுப்புவதால் சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.
NCLT மேற்பார்வையில் நடைபெறும் சொத்து விற்பனை செயல்முறையில் upGrad மற்றும் Manipal Group உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.
தொகுப்பு: முத்துகுமார்