
சென்னையை தலைமையகமாக கொண்ட சர்வதேச தொழில்நுட்ப நிறுவனம் 'ஜோஹோ', அனைத்தும் ஒன்றாக கொண்ட தனது வர்த்தக மென்பொருள் மேடை Zoho One-இல் பல்வேறு மேம்பாடுகளை அறிவித்துள்ளது.
எளிய பயன்பாடு மற்றும் மேம்பட்ட கூட்டு முயற்சிக்கு வித்திடும் இந்த மேம்பாடுகள் மூலம் புதிய ’ஜோஹோ ஒன்’ தனது 50க்கும் மேலான சேவைகளில் சீரான அனுபவத்தை அளிக்கிறது.
"இன்றைய ஜோஹோ ஒன் அப்டேட் செயலி சார்ந்த அமைப்பில் இருந்தும் மேடை சார்ந்த அமைப்பிற்கு பணிகள் மாறும் சூழலில் பயனர் அனுபவம் மாற்றி அமைக்கப்படுவதை உறுதி செய்வதாக,” இது தொடர்பான செய்திக்குறிப்பில், ஜோஹோ ஒன் மார்க்கெட்டிங் குலோபல் தலைவர் ஹரிஹரன் முரளிமனோகர் கூறியுள்ளார்.

"வாடிக்கையாளர்கள் ஜோஹோ ஒன் மூலம் செயலிகளுக்கான உரிமம் மட்டும் பெறவில்லை. அவர்கள் மன நிம்மதிக்கான உரிமம் பெறுகின்றனர். ஜோஹோ தொழில்நுட்ப அம்சங்களை கவனித்துக்கொள்ள அவர்கள் தங்கள் வர்த்தகத்தில் செயல்திறனில் கவனம் செலுத்தலாம்,” என்றும் கூறியுள்ளார்.
2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜோஹோ ஒன், ஒரு நிறுவனத்தின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்த வழி செய்யும் மென்பொருளாக அமைகிறது. உலக அளவில் 75,000 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வர்த்தகங்கள் சராசரியாக 22 செயலிகளுக்கு மேல் பயன்படுத்துகின்றன.
இந்த மென்பொருள் தனியுரிமை, பாதுகாப்பு, நம்பிக்கை ஆகிய அம்சங்களை கொண்டுள்ளன.
ஜோஹோ ஒன்’னின் புதிய அம்சங்கள், நுண்ணறிவு (AI), பயனர் அனுபவம், ஒருங்கிணைப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் அமைந்துள்ளன. நுண்ணறிவு நோக்கில், ’ஜோஹோ ஏஐ’ (Zoho ai) உதவியாளர் சேவை ஜியாவை அடிப்படையாக கொண்டுள்ளது. பல்வேறு மேடைகளில் இருந்து தரவுகளை சேகரித்து, பொருத்தமாக பயன்படுத்த உதவுகிறது.
இந்த மென்பொருள் சேவை ஜோஹோவின் நுண்ணறிவுமிக்க உள்ளடக்க நிர்வாக சேவையான ஜியா ஹப்ஸ் சார்ந்து இயங்குகிறது. மேலும், ’ஆஸ்க் ஜியா’ சேவையை ஜோஹோ ஒன் டூல்பாரில் எளிதாக அணுகலாம். இதன் மூலம் வேகமாக தேடுவதோடு, பொருத்தமான தரவுகளை பல்வேறு ஜோஹோ செயலிகளில் இருந்து அணுகலாம்.
ஜோஹோ ஒன் புதிய பயனர் இடைமுகம், ஸ்பேசஸ் அறிமுகம் மூலம், சூழல் அறிந்த பயனர் அனுபவத்தை அளிக்கிறது. ’ஜோஹோ ஒன்’னில் உள்ள செயலிகள், டூல்பாரில் ஸ்பேசசில் குழுவாக இணைக்கப்பட்டுள்ளன. இவை தனித்தன்மை வாய்ந்தவை. தனிப்பட்ட ஸ்பேஸ் தனிநபர்களுக்கான செயலிகள் கொண்டவை. ஒருங்கிணைப்பு கருவிகள், நிறுவன அளவிலான தகவல் தொடர்பு கருவிகளை உள்ளடக்கியவை. துறைகள் சார்ந்து இயங்கும் குறிப்பிட்ட ஸ்பேசசும் இருக்கின்றன.
புதிய மேம்பாடுகளிடன், இந்த மேடை, தனிப்பட்ட தன்மை கொண்டதாக அமைத்துக்கொள்ள கூடிய ஆக்ஷன் பேனல் கொண்டுள்ளது. இதை எந்த ஜோஹோ செயலி மூலம் அணுகலாம். எதிர்வரும் சந்திப்புகள், முடிக்கப்படாத செயல்கள், கிளிக் செய்தி, மெயில்கள், உள்ளிட்டவற்றை ஆக்ஷன் பேனலில் அணுகலாம்.
மூன்றாவது அம்சம், ஒருங்கிணைப்புகள் இயல்பாக அமைகின்றன, மையமான ஒருங்கிணைப்பு பேனலை வழங்குகிறது. மேலும், இந்த மேடை, ஒருங்கிணைந்த போர்டல் எனும் மாற்றி அமைக்கக் கூடிய ஸ்பேசை கொண்டுள்ளது.
இந்தியாவில் ஜோஹோ ஒன் கடந்த 8 ஆண்டுகளில் 27 சதவீத கூட்டு வளர்ச்சி கண்டுள்ளது. பிராந்திய ஆதரவுக்காக, தமிழ், கன்னடம், குஜராத்தி, இந்தி உள்ளிட்ட 12 மொழ் ஆதரவு கொண்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு அம்சங்களோடு இதன் கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan