
முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஜோஹோ, குறிப்பெடுக்கும் சேவையான ஜோஹோ நோட்புக்கில், ஏஐ திறன் கொண்டு, தகவல்களை சேமிப்பது, ஒருங்கிணைப்பது மற்றும் தேடி எடுக்க வழி செய்யும் வசதிகள் உள்ளிட்ட முக்கிய மேம்பாட்டை (நோட்புக் ஏஐ) அறிவித்துள்ளது.
மேலும், மாணவர்களுக்கான இலவச பதிப்பிலும் ஏஐ சார்ந்த மேம்பாடு அம்சங்களை அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது.
ஜோஹோ நோட்புக்கின் மேம்பட்ட புதிய வடிவம் தனியுரிமையை முதன்மையாக கருதும் அடித்தளம் வாயிலாக, நிறுவனங்கள் கூட்டாக தகவல்களை ஒருங்கிணைக்கும் விதத்தை மாற்றி அமைப்பதாக நிறுவனம் இது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
புதிய அப்டேட் மூலம் நிறுவன குழுக்கள் குறிப்பிட்ட துறை அல்லது திட்டங்கள் சார்ந்த பிரத்யேக பகிர்வு பணி இடத்தை பெறலாம் என்றும், அதே நேரத்தில் ஒருங்கிணைந்த ஒயிட் போர்டு வசதியின் அம்சங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து, படங்கள், கைகளால் வரைந்த அம்சங்களையும் உள்ளீடு செய்யலாம்.

ஜோஹோ சூழலுடன் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டதாக ஜோஹோ நோட்புக் அமைகிறது. ஜோஹோ சி.ஆர்.எம்., ஜோஹோ பிராஜெக்ட்ஸ் அல்லது ஜேஹோ மெயிலில் இருந்து இந்த சேவையை எளிதாக அணுகி பணிகளை ஒருங்கிணைக்கலாம். இப்படி இணைக்கப்பட்ட சூழல் குழுக்களின் செயல்பாட்டிற்கு உதவியாக அமையும்.
நோட்புக் ஏஐ அறிமுகம், ஜோஹோவின் சொந்த ஏஐ நுட்பமான ஜியாவின் திறன்களை இந்த சேவைக்குள் ஒருங்கிணைக்கிறது. இதன் கேள்வி பதில் அளிக்கும் ஆற்றலால் உள்ளடக்கம் தொடர்பான தகவல்களை கேள்வி மூலம் பெறலாம். ஆஸ்க் வித் மை கண்டெண்ட் எனும் அம்சம் இதற்கு உதவுகிறது. ஆஸ்க் எனிதிங் அம்சமும் மூலமும் தகவல்களை பெறலாம்.
மீட்டிங் நோட்ஸ் அம்சம் மூலம் பயனாளிகள், பேச்சு வடிவிலான உள்ளடக்கத்தை நேரம் குறிப்பிடப்பட்ட எழுத்து குறிப்புகளாக மாற்றிக்கொள்ளலாம். தானியங்கி சுருக்கங்களையும் பெறலாம். நீளமான ஆவணங்களை மைண்ட் மேப்பாகவும் மாற்றித்தருகிறது.
புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட் நோட் கிரியேஷன் மூலம், உள்ளடக்கத்தை எளிதாக அணுகும் செக்லிஸ்ட் அல்லது அட்டவனையாக மாற்றிக்கொள்ளலாம். எழுத்தை மெருக்கேற்றி மேம்படுத்தும் வசதியும் உள்ளது. சூழல் தேவைக்கேற்ப உள்ளடக்கத்தை மாற்றி உருவாக்கலாம்.
பிராந்திய மொழி ஆதரவுக்க்கு, பல மொழி குரல் வழி தேடல் மற்றும் மொழிபெயர்ப்பு வசதியும் இருக்கிறது. இந்தி, பெஙாலி, குஜராத்தி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளில் செயல்படுகிறது. சர்வதேச மொழி வசதியும் உள்ளது.
இந்த மேம்பாடுகள், இலவச மாணவர் பதிப்பும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நோட்புக் சேவை மூலம் ஏஐ திறன் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். ஜோஹோ நோட்புக் ஏஐ, ஜோஹோ ஒன் பிரிமியம் உரிமத்தில் கூடுதல் கட்டணம் இல்லாமல் வருகிறது. தனியேவும் பயன்படுத்தலாம். நோட்புக் எசன்ஷியல் தனி பயனாளிகளுக்கு இலவசம். நிறுவன சேவைக்கு கட்டணம் செலுத்தி மேம்படுத்திக்கொள்ளலாம்.
Edited by Induja Raghunathan