ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிர்ச்சி தரும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரன் விலை ரூ.81,000-ஐ கடந்துள்ளது நகை வாங்க விழைவோருக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10,060 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80,480 ஆகவும் இருந்தது. 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.10,975 ஆகவும், சவரன் விலை ரூ.87,800 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. கிராம் விலை 10,000-யும், சவரன் விலை ரூ.81,000-யும் கடந்துள்ளதற்கு சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வில் இருப்பதே காரணம். எனவே, சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலை மாற்றமின்றி புதிய உச்சத்தில் தொடர்கிறது.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்கிழமை (9.9.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.90 உயர்ந்து ரூ.10,150 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.720 உயர்ந்து ரூ.81,200 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.98 உயர்ந்து ரூ.11,073 ஆகவும், சவரன் விலை ரூ.784 உயர்ந்து ரூ.88,584 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (9.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.140 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,40,000 ஆகவும் மாற்றமின்றி புதிய உச்சத்துடன் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.04 என்ற அளவில் இருக்கிறது. டாலர் மதிப்பு உயர்வுடன், தங்கம் மீதான முதலீடும் அதிகரித்துள்ளதால், ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,150 (ரூ.90 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,200 (ரூ.720 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,073 (ரூ.98 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.88,584 (ரூ.784 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,150 (ரூ.90 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,200 (ரூ.720 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,073 (ரூ.98 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.88,584 (ரூ.784 உயர்வு)
Edited by Induja Raghunathan